Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 22, 2023

BSNLல் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலாக்கத்தில், BSNLEU பங்கு



 


சமீபத்தில், சென்னை தொலைபேசியில் உள்ள திருவான்மியூர் எனும் இடத்தில் இருந்த ஒரு ஊழியருக்கு, இருதயத்தில் கோளாறு ஏற்பட்டு, உடனடியாக அப்பொல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது சிகிச்சைக்கு 2 லட்ச ரூபாய் செலவானது. ஆனால், BSNL ஊழியர் சங்கத்தின் முன்முயற்சியால் அமலாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம், அவரது உதவிக்கு வந்தது.  இது தொடர்பாக, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்கியது தொடர்பாக BSNL ஊழியர் சங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளையும் உள்ளடக்கி, ஒரு WHATSAPP செய்தி, சென்னை தொலைபேசியில் உலா வருகிறது.  

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் எதுவென்றால், இந்த செய்தியை வெளியிட்ட தோழர் சந்திரகாந்த் JE, BSNL ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் அல்ல என்பது தான்.  ஆனால், BSNL ஊழியர் சங்கத்தின் இணைய தளத்தில் இருந்து, அனைத்து விவரங்களையும் சேகரித்து, சிரமப்பட்டு, இந்த செய்தியை உருவாக்கியுள்ளார்.  அந்த WHATSAPP செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்குவதற்கு, BSNL ஊழியர் சங்கம் எடுத்த முயற்சிகளை கீழே தரப்பட்டுள்ளது:-

15.05.2021 :- மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க கோரி CMD BSNLக்கு BSNLEU கடிதம்

17.05.2021 :- தோழர் P.அபிமன்யு GS, DIRECTOR(HR)ஐ சந்தித்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க கோரிக்கை.

25.05.2021 :-  தோழர் P.அபிமன்யு GS, மீண்டும் DIRECTOR(HR)ஐ சந்தித்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க கோரிக்கை.

04.06.2021 :-  தோழர் P.அபிமன்யு GS, மீண்டும், நிர்வாகத்தை சந்தித்தார்.  தவணை தொகை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த ஒரு INTERNAL COMMITTEE அமைக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்தது.

16.07.2021 :- மீண்டும் தோழர் P.அபிமன்யு GS, நிர்வாகத்தை சந்தித்தார்.  இது தொடர்பாக விவாதிக்க 22.07.2021 அன்று அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை அழைத்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது.  

22.07.2021 :- நிர்வாகம்-NEW INDIA ASSURANCE- அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

02.08.2021 :- ஊதியம் தாமதம் ஆவதால், தவணை தொகை பிடித்தம் செய்வது தொடர்பாக, BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திற்கு கடிதம்.

09.08.2021 :- ERPயில் விருப்பம் தருவதிலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக BSNLEU கடிதம்

09.08.2021 :- இந்த திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகள் தொடர்பாக BSNLEU கடிதம்

17.08.2021 :- NE-1 மற்றும் NE-2 மாநிலங்களில் மருத்துவ மனைகள் இல்லாதது தொடர்பாக BSNLEU கடிதம்

(BSNL மற்றும் NEW INDIA ASSURANCE ஆகியவற்றிற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை NEW INDIA ASSURANCE நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.)

31.08.2021 :- தோழர் P.அபிமன்யு GS, CMD BSNLஐ சந்தித்து, மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலாவதில் உள்ள காலதாமதம் தொடர்பாக விவாதித்து, CMD BSNLன் நேரடி தலையீட்டை கோரினார்.  

13.09.2021 :–மீண்டும் தோழர் P.அபிமன்யு, GS, மருத்துவ காப்பீடு அமலாவதில் ஏற்பட்டுள்ள தாமதம்  தொடர்பாக விவாதித்தார்.

12.10.2021 – மருத்துவ காப்பீடு அமளாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக BSNLEU, நிர்வாகத்திற்கு கடிதம்.

02.12.2021 – மருத்துவ காப்பீடு திட்டத்தை விரைவில் அமலாக்க வேண்டும் என BSNLEU, நிர்வாகத்திற்கு மீண்டுமொரு கடிதம்.

08.12.2021 - மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்குவதற்கு, இதர பொதுத்துறை காப்பீட்டு கழகங்களை அணுக வேண்டும் என தோழர்  P.அபிமன்யு GS, வலியுறுத்தல்.

10.12.2021 – புதிய quotationகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மீண்டும் BSNLEU, நிர்வாகத்துடன் விவாதம்.

17.12.2021 – மீண்டும் BSNLEU, நிர்வாகத்துடன் விவாதம்.

11.03.2022 – மீண்டும் ஒரு முறை BSNLEU, நிர்வாகத்துடன் விவாதம்..

09.04.2022 –Oriental Insurance Companyஉடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. 

19.04.2022 –  விருப்பம் தெரிவிப்பதற்காக கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு  BSNLEU கடிதம்.

21.04.2022 – விருப்பம் தெரிவிப்பதில் உள்ள சிரமங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு  BSNLEU கடிதம்.

01.05.2022 – BSNLலில் மருத்துவ காப்பீடு திட்டம் அமலுக்கு வந்தது.

05.05.2022 – இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் முதல் பயனாலியாக, ஆந்திர மாநில ஊழியர் ஒருவருக்கு  2,51,000/-. ரூபாய் பலன் கிடைத்துள்ளது.

23.08.2022 – இந்த மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பிரீமியம் தொகையை நிர்வாகமே செலுத்த வேண்டும் என BSNLEU, CMD BSNL க்கு கடிதம்.

BSNL ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்க, BSNL ஊழியர் சங்கம் எவ்வளவு சிரமப்பட்டுக் உள்ளது என்பதை  இந்த WhatsApp செய்தி விவரிக்கிறது. இந்த அனைத்து செய்திகளையும் ஊழியர்களின் பார்வைக்கு கொண்டு வந்த தோழர் சந்திரகாந்த் JE அவர்களுக்கு  BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 தோழர் P. அபிமன்யு 
 பொதுச் செயலாளர்