Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, January 14, 2023

இறந்து போன ஒப்பந்த தொழிலாளி குடும்பத்திற்கு, சமூக நல பலன்கள்


பணியில் இருந்த போது, விபத்தின் காரணமாக உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக 6,96,500 ரூபாய்களும், மாதாந்திர ஓய்வூதியமாக 18,618/- ரூபாய்களையும் பெற்று தந்த தமிழ் மாநில சங்கங்கள் 


தமிழ்நாட்டில், திருச்சி BAவில் SLA முறையில் பணியாற்றிய 42 வயதுடைய ஒப்பந்த ஊழியர் தோழர்  T.குணசீலன், 22.06.2020 அன்று பணியாற்றிக் கொண்டிருந்த போது மின் விபத்தில் சிக்கி, அந்த இடத்திலேயே பலியானார். அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் ஆகியோர் உள்ளனர். பிரேத பரிசீலனைக்கு பின் அடுத்த நாள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவர் OUTSOURCING முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர் என்ற காரணத்தைக் கூறி, ஒரு BSNL அதிகாரி கூட அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பல ஆண்டுகாலம் BSNLல் பணியாற்றிய அவரது குடும்பத்தாருக்கு, ஒரு பைசா கூட BSNL நிறுவனம் வழங்கவில்லை. SLA முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தான், முதன்மை முதலாளி (PRINICIPAL EMPLOYER) இல்லை என்று பிடிவாதமான மற்றும் மூர்க்கத்தனமான நிலைபாட்டை எடுத்தது.

அதன் பின் BSNLEU மற்றும் TNTCWU மாவட்ட மற்றும் மாநில சங்கங்கள் களத்தின் இறங்கியது. அவர்கள், அனைத்து சமூக நல பலன்களுக்காக, EPF மற்றும் ESI அதிகாரிகளை அணுகினர். அவர்களின் தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகளின் காரணமாக, உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தாருக்கு கீழ்கண்ட பலன்கள் கிடைத்தன:-

1) ESIயிலிருந்து ஈமச்சடங்கிற்கான உதவி ரூ.15,000/-.

2) EPFலிருந்து செலுத்திய பணம் வட்டியுடன் 1,25,000/- ரூபாய்.

3) 23.06.2020 முதல் EPFலிருந்து மனைவிக்கு ரூ.2,716/- மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.676/- என மொத்தம் மாதம் 4,068/-.

4) 31.12.2022 வரையிலான ஓய்வூதிய நிலுவை தொகை ரூ.1,20,000/-

5) ESI ஓய்வூதியம் (குடும்ப உறுப்பினர்களின் நலன்) 23.06.2020 முதல் ஒரு நாளைக்கு, மனைவிக்கு ரூ. 207.86/- குழந்தைகளுக்கு தலா ரூ.138.57/-. ஒட்டு மொத்த குடும்பத்திற்கு ரூ.14,550/-

6) 31.12.2022 வரையிலான காலத்திற்கான ESI நிலுவை தொகை ரூ.4,36,500/-.

7) EPFஉடன் இணைந்த காப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், EDLI காப்பீடு நீங்கலாக, மொத்தமாக ரூ.6,96,500/- கிடைத்துள்ளது.

8) மொத்த குடும்ப ஓய்வூதிய தொகை ரூ.18,618/-

இறந்து போன ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, இந்திய தொழிலாளர் நல சட்டங்களின் படியிலான அனைத்து சமூக நல பலன்களையும், பெற்றுத் தந்த தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தையும், TNTCWU சங்கத்தையும் சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்