Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 11, 2022

வெற்றிகரமாக நிறைவு பெற்ற BSNLWWCC அகில இந்திய கருத்தரங்கம்


BSNLEU சங்கத்தின் உப குழுவான, BSNLWWCC, BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு குழுவின் இரண்டாவது அகில இந்திய கருத்தரங்கம் (மாநாடு) நேற்று, (10.12.2022) கன்னியாகுமரியில், வெகு சிறப்பாக நடைபெற்றது. 

BSNLEU தமிழ்மாநில சங்கம் மற்றும் BSNLWWCC தமிழ் மாநில கமிட்டி இணைந்து வரவேற்பு குழுவாக செயல்பட்டு, சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த இந்த கருத்தரங்கத்தில், BSNLEU சங்கத்தின் அகில இந்திய பொது செயலர் தோழர் P.  அபிமன்யு, BSNLWWCC அகில இந்திய கன்வீனர் தோழர் P. இந்திரா, CITU செயலர் தோழர் A.R. சிந்து, டில்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து PGM SR திருமதி அனிதா ஜோஹரி, CLO  திரு ஜெகதீஷ் பிரசாத், வரவேற்புக்குழு தலைவர் தோழர் லீமா ரோஸ், BSNLEU உதவி பொது செயலர் தோழர் S. செல்லப்பா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு, கருத்துரை, சிறப்புரை வழங்கினார்கள். 

நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த சார்பாளர் தோழர்கள் விவாதத்தில் பங்குபெற்றனர். முடிவில் பணி நிறைவு பெற்ற தோழர்கள் இளைய தலைமுறைக்கு வழி விட்டு, பொறுப்புக்களில்  இருந்து விலகி, புதிய மத்திய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. 

தற்போது பணியில் உள்ள 13 பெண் தோழர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் K. N. ஜோதிலக்ஷ்மி (கேரளம்),  கன்வீனராகவும்,  தோழர் நந்திதா தத்தா (மேற்கு வங்கம்), தோழர் அமிதா நாயக் (மராட்டியம்) இணை ஒருங்கிணைப்பாளர்களாவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து தர்மபுரி தோழர் உமாராணி, மத்திய கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள். பொறுப்பில் இருந்து விலகும் மூத்த தோழர்கள் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் செங்கொடியை வழங்கிய நிகழ்வு, நெகிழ்ச்சியாக இருந்தது.  

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்