Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 16, 2022

வெற்றிகரமாக நடைபெற்ற வெற்றி விழா கூட்டம்


8 திக்கும் வெற்றி முரசு கொட்டும், BSNLEU சங்கத்தின் 8வது தொடர் வெற்றியை, சேலம் மாவட்டத்தில் முப்பெரும் விழாவாக, வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. அதாவது, வெற்றிவிழா, சேலம் மாவட்ட வெற்றிக்கு நன்றி அறிவிப்பு மற்றும் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் என முப்பெரும் விழாவாக கொண்டப்பட்டது. 

சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், 15.12.2022 அன்று நடைபெற்ற சிறப்புமிக்க வெற்றிவிழா கூட்டத்திற்கு, மாவட்ட உதவி தலைவர் தோழர் P. தங்கராஜு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, விண்ணதிரும் கோஷங்களை மத்தியில், BSNLWWCC அமைப்பின் மாநில கமிட்டி உறுப்பினர் தோழியர் R. அபிராமசுந்தரி ஏற்றி வைத்தார். வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியையும், கூட்டம் நடைபெறும் செய்தியையும் வெளிப்படுத்தும் விதமாக வரவேற்பு குழு தோழர்கள் பட்டாசு வெடித்ததனர்.   

மாநாட்டிற்கு இணையான தோரணங்கள், கொடிகள் என வரவேற்பு குழு தோழர்கள் செய்திருந்த ஏற்பாடுகளை கடந்து, கூட்ட அரங்கிற்கு சென்றவுடன், முதல் நிகழ்வாக, அஞ்சலி உரை நிகழ்த்தப்படட்டு, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தணிக்கையாளர் தோழர் R. ராதாகிருஷ்ணன் அஞ்சலியுறை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு வந்திருந்த தோழர், தோழியர்களே மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசன் வரவேற்று, வரவேற்புரை வழங்கினார்.

மாநில அமைப்பு செயலர் தோழர் R. ரமேஷ் செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். அவர்தம் உரையில், ஒன்றிய அரசாங்கம் கடைபிடிக்க கூடிய பிற்போக்கான பொருளாதார கொள்கைகள், அதனால் நமது நிறுவனம் சந்திக்கும் சவால்கள், கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார நிகழ்வுகள்,  கொரானா பிந்தைய காலத்தில் சாமான்ய மக்கள் சந்திக்கும் சவால்கள், போலியாக உருவாக்கப்படும் பிம்பம், மாறாக, உலக அளவில் பசி, பட்டினி, பொருளாதார நிலையில், நமது நாடு  பெற்றிருக்கும் குறியீடுகளை விளக்கி பேசினார். 

கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு புறப்படும் நேரத்தில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உடல் நல குறைவால்,  மாநில தலைவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையில்,  தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், நாடு முழுவதும் நமது சங்கத்திற்கு கிடைத்த வாக்கு விவரங்கள், அகில இந்திய, மாநில சங்கங்களின் தேர்தல் பிரச்சாரங்கள், சமூக வலை தள குழு பணிகள், மாற்று சங்கத்தின் பொய் பிரச்சாரங்கள், ஊழியர்கள் வாக்களித்த விதம், மாநில அளவில் தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள், மகிழ்ச்சியோடு நடத்தப்பட்ட மதுரை வெற்றி விழா கூட்ட நிகழ்வுகள், BSNLWWCC அமைப்பின் இரண்டாவது அகில இந்திய கருத்தரங்கம், மூன்றாவது ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை விவரங்கள், சம்பள விகிதங்கள் கணக்கிடும் முறை, நமது நிலைப்பாடு உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். பின்னர் AIBDPA சேலம் மாவட்ட செயலர்  தோழர் S. தமிழ்மணி வாழ்த்துரை வழங்கினார்.

ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி மாவட்ட செயலர் தோழர் E. கோபால், விரிவான விளக்கவுரை வழங்கினார். அவர்தம் உரையில், மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பணியான இல்லந்தோறும்  இயக்கம் நிகழ்ச்சி, கூட்டங்கள்,  பிரச்சாரங்கள், கிளைகளில் நடைபெற்ற தேர்தல் பணிகள், தோழர்களின் உற்சாக பங்களிப்பு, மாற்று சங்கத்தின் பொய் பிரச்சாரங்கள், தரம் தாழ்ந்த தனி நபர் விமர்சங்கள், ஓய்வூதியர், ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் சங்கங்களின் பங்களிப்பு, மாவட்ட அளவில் தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள், நமது எதிர்கால கடமைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துரை வழங்கினார். AIBDPA மாநில உதவி செயலர் தோழர் T. பழனி, மாவட்ட உதவி செயலர் தோழர் S. அழகிரிசாமி, TNTCWU மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மாவட்ட செயலரின் தொகுப்புரைக்கு பின், பொங்கலுக்கு முன், 12 கிளை  கூட்டங்களையும், CoC, ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களாக நடத்துவது, பொங்கலுக்கு பின் மாவட்ட செயற்குழுவை, ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடத்துவது, அதில், காலியாக உள்ள மாவட்ட சங்க பொறுப்புகளுக்கு தோழர்களை தேர்வு செய்வது, கவுன்சில் உறுப்பினர்கள் தேர்வு செய்வது, TNTCWU சங்கத்தின் செயற்குழு கூட்டத்தை கூட்ட வழிகாட்டுவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நிலுவையில் உள்ள உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்வு காண முயல்வது, சேவை குறைபாடுகளை போக்க நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

தேர்தல் பணிகளில், மாவட்ட சங்கத்திற்கு, உடல் உழைப்பு, உதவிகள் மிகுதியாக செய்த  தோழர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.  மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R. முருகேசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

அன்பான உபசரிப்பு, சுவையான உணவு, நேர்த்தியான ஏற்பாடுகள், கொடிகள், வண்ணமயமான  தோரணங்கள், சிறப்பான கூட்ட அரங்கு என அற்புதமான ஏற்பாடுகள் செய்த சேலம் நகர கிளை தோழர்களின் பணிகள் போற்றுதலுக்குரியது. வெற்றிவிழாவை வெற்றிகரமாக்க, மாவட்டம் முழவதிலும் இருந்து, திரளாக கலந்து கொண்ட தோழர், தோழியர்களுக்கும், AIBDPA, TNTCWU சங்க தோழர்களுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்