9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில், BSNL ஊழியர் சங்கம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலின் இறுதி முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.
BSNLEU - 15,311 (48.62%)
NFTE - 11,201 (35.57%)
BTEU - 1,634 (5.19%)
FNTO - 573 (1.82%)
மிகக்குறுகிய இடைவெளியில், BSNL ஊழியர் சங்கம் 50% வாக்குகளை பெற தவறி விட்டது. அதே சமயம், கடந்த 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் 43.44% வாக்குகளை பெற்றிருந்த BSNL ஊழியர் சங்கம், இந்த 9வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் 48.62% என்ற அளவில் தனது வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. இது ஒரு மகத்தான சாதனை.
மேலும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்களில் எட்டாவது தொடர் வெற்றியை பெற்றுள்ளது. இது மற்றுமொரு வரலாற்று சாதனையாகும்.
BSNL ஊழியர் சங்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்து, BSNL ஊழியர் சங்கத்திற்கு வாக்களித்த அனைத்து ஊழியர்களுக்கும், சேலம் மாவட்ட சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மகத்தான வெற்றிக்கு கடுமையாக உழைத்த அனைத்து அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்க தோழர்களையும், சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.