TNTCWU சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், 01.05.2022 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் K. ராஜன் மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். தோழர் C. பாஸ்கர், மாவட்ட பொருளர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் L. செல்வராஜூ, மாவட்ட உதவி தலைவர் அனைவரையும் வரவேற்றார்.
BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S.ஹரிஹரன் செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் C. பாஸ்கர் நிதி நிலை சம்மந்தமான விவரங்களை வழங்கினார். ஆத்தூர் கிளை 2021 வரையிலும், வேலூர், ராசிபுரம் கிளைகள் 2020 வரையிலும், மற்ற கிளைகள் வரை 2018 மட்டுமே சந்தா வழங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தார்.
பின்னர் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து, TNTCWU மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார்.
சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், நாம் நடத்தக்கூடிய இயக்கங்கள், நீதி மன்ற வழக்குகள், மாறியிருக்ககூடிய ஒப்பந்த முறைகள், ஒப்பந்த ஊழியர் எதிர்கால கடமைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி சிறப்புரை வழங்கினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
1. 2021 வரை கிளைகள் சந்தாவை வசூலித்து, மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
2. ஒப்பந்த ஊழியர்களுக்கு, தரமான நவீன அடையாள அட்டை வழங்குவது அதற்கான கட்டம் கட்டணம், ரூ.150.00 என நிர்ணயிப்பது
3. OUTSOURCING பழைய ஒப்பந்ததாரர், NAVITEL நிறுவனத்திடம், நான்கு மாத ஊதிய நிலுவை, போராடி பெற்று தருவது.
4. INFRA பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு, 04.05.2022 க்குள் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்கிற நிர்வாகத்தின் உத்தரவாதம் நடைமுறை படுத்த விடவில்லை என்றால் போராட்ட களம் காண்பது.
5.2022 ஜூன் மாதத்தில், TNTCWU மாநில செயலரிடம் தேதி பெற்று, விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை நடத்துவது.
6. 2019, 2020, 2021 ஆண்டுகளுக்கான போனஸ் பெற தொடர்ந்து முயற்சிப்பது
7. நீதிமன்றம் உத்தரவிட்டும், INFRA பகுதி தோழர்களின் கணக்கில் தொகை செலுத்தப்படாததை கண்டிப்பது, நிர்வாகத்தின் தலையீடை கோருவது.
8. OUTSOURCING தோழர்களுக்கும் EPF / ESI அமுலாக்க முயற்சிப்பது.
9. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், வழங்கப்படவேண்டிய நிலுவையில் உள்ள குளறுபடிகளை போக்க, நிர்வாகத்திற்கு புகார் வழங்குவது.
தோழமையுடன்,
M. செல்வம் ,
மாவட்ட செயலர்