Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 27, 2022

தோழர் சித்திரசேனன் பணி நிறைவு பாராட்டு விழா


GM அலுவலக கிளை மூத்த தோழர், தோழர் K. சித்திரசேனன், TT அவர்கள் வருகிற 31.05.2022 அன்று இலாக்கா பணி நிறைவு செய்கிறார். தோழரை கௌரவப்படுத்தும் விதமாக, இன்று (27.05.2022) GM அலுவலகத்தில், சிறிய அளவிலான பிரிவு உபசார விழாவை, GM அலுவலக கிளை ஏற்பாடு செய்திருந்தது.

கூட்டத்திற்கு தோழர் R. ஸ்ரீனிவாசன் கிளை உதவி தலைவர், தலைமை ஏற்க, மாவட்ட தணிக்கையாளர் தோழர் K. ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

முதல் நிகழ்வாக விழாவின் கதாநாயகன் தோழர் K. சித்திரசேனன் அவர்களுக்கு மாவட்ட செயலர் தோழர் E. கோபால் சால்வை அணிவிக்க, தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், சந்தன மாலை அணிவித்து, தோழரை கௌரவப்படுத்தி வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்கள். அவர்களை தொடர்ந்து BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. தங்கராஜு, P. செல்வம், K. ராஜன்,  R. முருகேசன், கிளை செயலர்கள் தோழர்கள் N. சிவகுமார், P. பத்மநாபன், AIBDPA மாநில நிர்வாகி தோழர் T. பழனி, AIBDPA  கிளை செயலர் தோழர் D. சுப்பிரமணி ஆகியோர் தோழரை வாழ்த்தி பேசினார்கள்.

தோழர் K. சித்திரசேனன் அவர்களின் ஏற்புரைக்கு பின், GM அலுவலக கிளை செயலர் தோழர் J.  ஸ்ரீனிவாசராஜு நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். வந்திருந்த தோழர்களுக்கு, தோழர் K. சித்திரசேனன் சுவையான சிற்றுண்டி வழங்கி நன்றி தெரிவித்தார்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்