ஓரியண்டல் காப்பீட்டு கழகத்துடன் இணைந்து, ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை, BSNL நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் இணைந்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து பல தோழர்கள், காப்பீட்டுத் திட்ட அட்டையை எவ்வாறு பெறுவது என்பது உள்ளிட்ட பல விவரங்களை, மத்திய சங்கதிடம் கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக கீழ்கண்ட விவரங்களை மத்திய சங்கம் வழங்கியுள்ளது.
1) https://drive.google.com/file/d/1i-SejrBPOyDdOfUUGQz92YUhD-npyf-x/view?usp=drivesdk என்ற MOBILEAPP ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2) அதன் பின் அதனுள் செல்ல, ஊழியரின் PER NO(HRMS No.), LOGIN IDயாக பயன்படுத்த வேண்டும்.
3) அதற்கான கடவுச்சொல் (PASSWORD) என்பது அவரது பிறந்த தேதியாக இருக்கும். (DD/MM/YYYY). (உதாரணமாக 1985 ஆம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்தவராக இருந்தால், அவரது PASSWORD 15/08/1985 என இருக்கும்.)
4) எனினும், ஊழியர்களின் LOGIN ID மற்றும் PASSWORD ஆகியவை 0/00/000/0000 என இருக்கக் கூடாது. அதனை இந்த APP ஏற்றுக் கொள்ளாது. உதாரணமாக ஒருவரின் PERNO 0080XXXXஆக இருந்தால், இதனை 80XXXX என பதிவு செய்ய வேண்டும்.
5) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளின் பட்டியல், பணமில்லா சிகிச்சை மற்றும் பணத்தை திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம், அவற்றை பெறுவதற்கு வழங்க வேண்டிய டாக்குமெண்ட்கள் ஆகியவற்றை கீழ்கண்ட் இணைப்புகளில் தெரிந்துக் கொள்ளலாம்.
IRDA Claim Form: http://www.mdindiaonline.com/documents/claimform.pdf/a>
Check list: http://www.mdindiaonline.com/documents/claimdocumentschecklist.pdf
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்