BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின், செயற்குழு கூட்டம், இன்று (08.03.2022), சேலம் மெயின் தொலைபேசி நிலைய C-DoT MBM கூட்ட அரங்கில், சிறப்பாக நடைபெற்றது. தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். தோழர் P. தங்கராஜு, மாவட்ட உதவி தலைவர், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே சங்க கொடியை ஏற்றி வைத்து, பின் அஞ்சலியுறை வழங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் K. ராஜன் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் S. தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E. கோபால், மாவட்ட செயலர் விளக்கவுரை வழங்கினார்.
சேலம் மாவட்ட AIBDPA சங்க நிர்வாகி தோழர் T. பழனி வாழ்த்துரை வழங்கியபின், செயற்குழு உறுப்பினர்கள் விவாதத்தில் பங்குபெற்றனர். 11 கிளை செயலர்கள், 14 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1. 28.03.2022 மற்றும் 29.03.2022 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை, சேலம் மாவட்டத்தில் 100சதவீதம் வெற்றிகரமாக்குவது.
2.18.03.2022 மற்றும் 19.03.2022 தேதிகளில் நடைபெறவுள்ள, 9வது மாநில மாநாட்டிற்கு, 16 சார்பாளர்கள், 8 பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
3. 2022 ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள 10வது அகில இந்திய மாநாட்டிற்கு, 4 சார்பாளர்கள், 2 பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
4. 10வது மாவட்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய, நகர கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
5. வேலை நிறுத்த தயாரிப்பு கிளை கூட்டங்களை, 21.03.2022 முதல் 26.03.2022 வரை நடத்துவது. தயாரிப்பு கூட்டங்களை ஊழியர் சந்திப்பு இயக்கமாக நடத்துவது, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோருவது.
6. வேலை நிறுத்தத்திற்கு நோட்டீஸ் வெளியிடுவது
7. கிளைகளில் உடனடியாக வேலை நிறுத்த விளம்பர FLEX வைப்பது
8. மாவட்ட, மாநில மாநாட்டு நிதி நிலுவையை,16.03.2022க்குள் முழுமையாக செலுத்துவது. (ஆத்தூர் மற்றும் மெய்யனுர் கிளைகள், 100 சதம், மாநாட்டு நிதி கோட்டாவை பூர்த்தி செய்தார்கள். கிளைகளுக்கு பாராட்டுக்கள்.)
9. ஒருங்கிணைப்பு குழு மற்றும் BSNLEU - TNTCWU சங்கங்களில் முடிவின்படி, 10.03.2022 அன்று ஊரக கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. 11.03.2022 அன்று நகர கிளைகள் மற்றும் 3 சங்க மாவட்ட நிர்வாகிகள், சேலம் GM அலுவலகத்தில், கருப்பு அட்டை அணிந்து, ஆர்ப்பாட்டம் நடத்துவது. பொது மேலாளரிடம் மகஜர் வழங்குவது.
மாவட்ட பொருளர் தோழர் M. சண்முகம் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், கூட்டத்தில் கலந்து கொண்டார். கிளை சங்கங்கள் மாவட்ட செயற்குழு முடிவுகள் செம்மையாக நிறைவேற்றுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.