ஊழியர்களுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக உரிய தேதியில் ஊதியம் வழங்கபடாமல் இருந்தது, முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. 27.10.2021 அன்று, AUAB மற்றும் BSNL CMDக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில், இந்த பிரச்சனையின் மீது ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, ஜனவரி, 2022 முதல், ஒவ்வொரு மாதமும், மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்கப்படும். எனினும், 27.10.2021 அன்று CMD BSNL, AUABக்கு கொடுத்த சில வாக்குறுதிகள், அமலாக்கப் படவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாகும்.
எனவே, 2022 ஜனவரி மாத ஊதியத்தை 31.01.2022 அன்றும், அதற்கு அடுத்து வரும் மாதங்களில், ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தை நினைவு படுத்தி, அதனை அமலாக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்