Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, December 9, 2021

மருத்துவ காப்பீட்டு திட்டம்


BSNL நிர்வாகத்திற்கும், NEW INDIA ASSURANCE COMPANYக்கும் இடையே கையெழுத்தாகியிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அமலாக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.  அதன் பின்னரும், ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது.  இது தொடர்பாக, BSNL ஊழியர் சங்கம் DIRECTOR (HR)க்கு, ஏற்கனவே இரண்டு கடிதங்களை எழுதியுள்ளது.  இது தொடர்பாக,  07.12.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு மற்றும் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா ஆகியோர், கார்ப்பரேட் அலுவலகத்தின் GM(Admin) திரு S.P.சிங் அவர்களை சந்தித்து விவாதித்தனர். 

இதன் மீது விரைவான நடவடிக்கைகளை கார்ப்பரேட் அலுவலகம் எடுத்து வருவதாக பதிலளித்த அவர், நான்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  அவை 08.12.2021 பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்த அவர், விருப்பப்படும் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம், 2022 ஜனவரி அல்லது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்