செப்டம்பர் மாத ஊதியம் தொடர்பாக, 07.10.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, திரு P.C.பட் Sr.GM(CBB) அவர்களுடன் விவாதித்தார். அப்போது அவர், செப்டம்பர் மாத ஊதியம், இந்த மாதம் 11 அல்லது 12ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த மாதம் முதல் முறையாக, கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் செப்டம்பர் மாத ஊதியம் செலுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.