Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 3, 2021

05.10.2021 அன்று நடைபெற உள்ள பேரணி


இடம்: பொது மேலாளர் அலுவலகம், சீரங்கபாளையம், சேலம்

நாள்: 05.10.2021 -  செவ்வாய்க்கிழமை 

நேரம்: காலை 10 மணிக்கு 


ஹைதராபாத்தில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவில், பணியில் உள்ள ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண போராட்ட இயக்கங்களை நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டது. அது ஒருங்கிணப்புக் குழுவின் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, கோரிக்கைகளும், இயக்கங்களும் முடிவு செய்யப்பட்டன. 

அதன் அடிப்படையில், 14.09.2021 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றன. அடுத்த கட்ட இயக்கமாக 05.10.2021 அன்று “SSA/BA தலைமையகத்தை நோக்கிய பேரணி” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இயக்கம் வெற்றிகரமாக நடத்திட 29.09.2021 அன்று நடைபெற்ற சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  

அதன்படி, சேலம் ராமகிருஷ்ணா பூங்காவில் இருந்து பேரணி துவங்கி GM அலுவலகத்தை அடைவதற்கு திட்டமிட்டு, காவல் துறை அனுமதி கோரியுள்ளோம். நம் தோழர்கள் முதலில், 5.10.21 அன்று காலை 10  மணிக்கு GM அலுவலகம் வந்து விட வேண்டும். அனுமதியை பொறுத்து நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படும். 

BSNLEU, AIBDPA மற்றும் BSNL CCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே, முடிவு செய்துள்ள கோரிக்கைகளை மீண்டும் கீழே கொடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளை, அனைத்து பணியில் உள்ள ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் கொண்டு சென்று, இந்த பேரணிகளில் அதிகப்படியான தோழர்களை திரட்ட வேண்டுமென் தோழமையுடன கேட்டுக் கொள்கிறோம்.

கோரிக்கைகள்:-

1. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்துக!

2. ஒவ்வொரு மாதமும், மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்குக!

3. BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண்க!

4. ஊதிய மாற்ற பிரச்சனையை இணைக்காமல், 15% நிர்ணய பலனுடன் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்துக!

5. லேண்ட் லைன் மற்றும் ப்ராட் பேண்ட் களுக்கு விடப்பட்டுள்ள SLA அடிப்படியிலான OUTSOURCING முறையை கைவிடுக!

6. நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்களை அமல்படுத்துக!

7. அனைத்து இலாகா தேர்வுகளையும் உடனடியாக நடத்துக!

8. ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்குக!

9. சீரமைப்பு என்ற பெயரில் பதவிகளின் எண்ணிக்கையை குறைக்காதீர்!

10. பணியில் உள்ள, ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவ பில்களை காலதாமதமின்றி உடனே தீர்வு காண்க!

11. ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யாதீர்! பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடு!

12. காசுவல் ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதத்தை வழங்குக!

13. நேரடி நியமன JEக்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களின் விருப்ப மாற்றலை தீர்வு காண்க!

14. நிர்வாகக் குழு, ஏற்கனவே ஏற்றுக் கொண்ட, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு E1 ஊதிய விகிதத்தை உடனே அமல்படுத்துக!

15. ஊதிய தேக்க நிலைக்கு தீர்வு காண புதிய பதவி உயர்வு கொள்கைய அறிமுகப்படுத்து!

தோழமையுடன், 

E. கோபால், 
கன்வீனர்,
ஒருங்கிணைப்பு குழு மற்றும் 
D/S BSNLEU


M. மதியழகன்,
தலைவர்,
ஒருங்கிணைப்பு குழு மற்றும் 
D/S AIBDPA


M. செல்வம்,
இணை கன்வீனர்,
ஒருங்கிணைப்பு குழு மற்றும் 
D/S TNTCWU


சேலம் மாவட்டம்