Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, July 5, 2021

கோரிக்கை அட்டை வெளிக்காட்டும் இயக்கம்

15.07.21 சேலம் GM அலுவலகம், மதியம் 12.30 மணி அளவில் 


01.07.2021அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 15.07.2021 அன்று கோரிக்கை அட்டை வெளிக்காட்டும் இயக்கம், (PLACARD SHOWING AGITATION),  சேலம் GM அலுவலகத்தில் மதியம் 12.30 மணி அளவில் நடைபெறும்.  தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

டில்லி சஞ்சார் பவன் முன்பு நடைபெற உள்ள இயக்கத்தில், அனைத்து பொதுச் செயலர்களும், பங்கு பெறுவார்கள். மாநில தலைநகரங்களில், மாநில செயலர்கள் பங்கு பெறவுள்ளாளர்கள்.  அதே போன்று மாவட்ட மட்டத்தில் நடைபெறும் இந்த இயக்கத்தில் முழுமையாக பங்கேற்று, இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிடுவோம். 

அடுத்த கட்டமாக, 28.07.2021 அன்று நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகுவோம்.

BSNLன் புத்தாக்கம் மற்றும் ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள AUABயின் கோரிக்கை சாசனம்

1. BTSகளை மேம்படுத்துவதன் மூலம், உடனடியாக 4G சேவையினை BSNL நிறுவனம் துவங்க வேண்டும்; 5G சேவைகளை துவக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. 2021, ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கு! இனிமேல், ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்கு!.

3. இந்திய அரசாங்கம்/ நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ள படி BSNLன் ஆப்டிக் ஃபைபர் மற்றும் டவர்களை பணமாக்க முயற்சிக்க கூடாது.

4. BSNL நிறுவனத்திற்கு DoT வழங்க வேண்டிய 39,000 கோடி ரூபாய்களை உடனடியாக வழங்க வேண்டும்.

5. காலியாக உள்ள நிலங்களை பணமாக்குவதன் மூலம், BSNLன் கடன்களை திருப்பி கட்ட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

6. க்ளஸ்டர் முறையிலான அவுட்சோர்சிங் முறையை முழுமையாக மறு பரீசீலனை செய்ய வேண்டும்.

7. 3வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வு கால பலன்கள் ஆகியவற்றை உடனடியாக தீர்வு காண வேண்டும்.

8. BSNLன் FTTH சேவையின் தரத்தை மேம்படுத்த, வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

9. BTSகளை முறையாக பராமரிக்க வேண்டும்; பவர் ப்ளேண்ட்களை முறையாக பராமரிக்க வேண்டும்: பேட்டரிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.

10. TRANSMISSION NETWORKஐ பலப்படுத்த வேண்டும்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU
மற்றும் கன்வீனர், AUAB 

AUAB அறிக்கையின் தமிழாக்கம் காண இங்கே சொடுக்கவும்