21.06.2021 அன்று அகில இந்திய AUAB கூட்டம், காணொளி காட்சி மூலம் உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், BSNLEU, NFTE, AIGETOA, SNEA, AIBSNLEA, FNTO, SEWA BSNL, BSNL MS, BSNL ATM, TEPU மற்றும் BSNL OA சங்கங்களின் பொதுச்செயலர்களும், தலைவர்களும் பங்கேற்றனர். உரிய தேதியில் ஊதியம் வழங்கப்படாதது, BSNLன் 4G அமலாக்கத்தில் அதீத கால தாமதம், BSNLன் புத்தாக்கம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.
கோரிக்கை பட்டியலையும், இயக்கங்களையும் இறுதி செய்திட, நேரடியான AUAB கூட்டம் புதுடெல்லியில், 01.07.2021 அன்று நடைபெறும். இந்தக் கூட்டத்திற்கு, உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அகில இந்திய AUAB வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்