கால தாமதமாக ஊதியம் தரும்போது 6% வட்டியையும் சேர்த்து வழங்குவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம்
ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய தேதியில் ஊதியத்தை வாங்குவதற்கு, BSNL ஊழியர் சங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், கடந்த காலங்களை போலவே, இந்த மாதமும், உரிய தேதியில் ஊதியம் வழங்குவதில்லை என நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே, கால தாமதமாக ஊதியம் வழங்குவதால், ஊதியத்துடன் 6% வட்டியையும் சேர்த்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்து BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்