உரிய தேதியில் ஊதியம் வழங்காமல, ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும், நிர்வாகத்தின் போக்கை எதிர்த்து, 05.02.2021 அன்று ஆர்ப்பாட்டம்.
ஒவ்வொரு மாதமும், உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. 21.01.2021 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு BSNL ஊழியர் சங்கம் அறைகூவல் விடப்படிருந்த சூழ்நிலையில், நிர்வாகம், அவசரம், அவசரமாக, 2020 டிசம்பர் மாத ஊதியத்திற்கான நிதியை, வழங்கியது.
ஆனால், ஜனவரி மாத ஊதியத்தை, உரிய தேதியில் வழங்க வில்லை. இவ்வாறு, ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை BSNL நிர்வாகம் தொடந்து செய்து வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது.
31.01.2021 அன்று காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில், ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், உரிய தேதியில், ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய தொடர் இயக்கங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
மத்திய, மாநில சங்கங்களின் அறைகூவல்படி, அதிகப்படியான ஊழியர்களை திரட்டி, 05.02.2021 அன்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என கிளை சங்கங்களை, மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
சேலம் நகர கிளைகள் சார்பாக, 05.02.2021 அன்று, GM அலுவலகத்தில் மதியம் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.