மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் மூலம் 01.01.2021 முதல் 6.1 சதவிகித IDA உயரும். இதற்கு முன்னர் 01.10.2020 முதல் 5.5% IDA உயர்ந்துள்ளதையும், அது நமக்கு இன்னமும் வந்து சேரவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
01.10.2020 மற்றும் 01.01.2021 ஆகிய இரண்டு தேதிகளில் வரவேண்டிய IDAக்களான 11.6%த்தை BSNL நிர்வாகம் இன்னமும் வழங்க வில்லை. IDA முடக்கம் தொடர்பாக DPE வழங்கிய உத்தரவு BSNLல் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தாது என கேரள உயர் நீதிமன்றத்தில், BSNLஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.
BSNLல் உள்ள ஊழியர்களுக்கு, 11.6% IDAவை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் BSNLஊழியர் சங்கம் எடுத்து வருகிறது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்