BSNLCCWF மத்திய கூட்டமைப்பின், அறைகூவலுக்கிணங்க, ஒப்பந்த ஊழியர்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் 25.08.2020 அன்று, முதல் நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நமது சேலம் மாவட்ட BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்களின் முடிவின்படி, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், மாவட்டம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தோழர் K . ராஜன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், போராட்டத்தை துவக்கி வைத்தார். BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சக்திவேல், செல்வம், AIBDPA மாவட்ட சங்க நிர்வாகி, தோழர் T . பழனி, TNTCWU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், நன்றி கூறி முதல் நாள் போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில், 20 பெண்கள் உட்பட 60 தோழர்கள் கலந்து கொண்டனர். 26.08.2020 அன்று கிளைகளில் போராட்டம் நடைபெறும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்