தபால் தந்தி இயக்கத்தின் மிகப்பெரிய தலைவரான தோழர் K.G.போஸ் அவர்களுக்கு 07.07.2020 அன்று நூறாவது பிறந்த நாள் என்பதால் நாடு முழுவதும், அனைத்து பகுதிகளிலும், கொடியேற்றி, அவரது திருவுருவ படத்தை திறந்து வாயிற்கூட்டங்களை நடத்தி சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என BSNLEU மத்திய, மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, 07.07.2020, அன்று நமது மாவட்டத்தில், சேலம் MAIN , திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம் கிளைகளில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நமது தொழிற்சங்க ஆசான், தோழர் K .G. போஸ் அவர்களை நினைவு கூர்ந்து, நூற்றாண்டு விழா நிகழ்வுகளை துவங்கிய கிளைகளுக்கு, தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
சேலம் BSNLEU சங்க அலுவலகம்
திருச்செங்கோடு
ஆத்தூர்
நாமக்கல்
ராசிபுரம்