Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 9, 2020

அருமை தோழர் K.மாரிமுத்து மறைந்தார்



BSNL ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய மாநில உதவி தலைவரும், தமிழகத்தில் ITEU மற்றும் TNTCWU சங்கங்கள் உருவாக காரணமாகவும், அவற்றில் பெரும்பங்காற்றியவருமான அருமை தோழர் K.மாரிமுத்து அவர்கள் இன்று (09.09.2020) அதிகாலை 2.30 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

கோவை மாவட்டத்தில் நமது சங்கம் வலுவான சங்கமாக உருவாக காரணமான முதல் வரிசை தலைவர்களில் ஒருவரான தோழர் மாரிமுத்து, இலாகாவில் காசுவல் ஊழியராக பணியில் சேர்ந்து TT வரை பதவி உயர்வு பெற்றவர். எழுத்தர் தேர்வில் இரண்டு முறை வெற்றி பெற்ற போதும், லைன்ஸ்டாப் சங்கத்தின் மீதிருந்த அதீத பற்றின் காரணமாக பயிற்சிக்கு செல்லாமல் லைன்ஸ்டாபாகாவே பணி ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.

கிளை மட்டத்தில் தனது பணியினை துவங்கிய தோழர் மாரிமுத்து, கோவை மாவட்டம் பின்னர் தமிழகம் முழுவதும் தனது சங்க பணிகளை ஆற்றி உள்ளார். சக தொழிலாளிகளின் பிரச்சனையை புரிந்துக் கொண்டு, நிர்வாகத்துடன் மிகச்சிறப்பாக வாதாடுவதிலும், பிரச்சனைகள் தீராத போது திட்டமிட்டு வெற்றிகரமான இயக்கங்களை நடத்துவதிலும், அவற்றை தீர்த்து வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. 

தமிழகம் முழுவதும் நமது இயக்கத்தின் வளர்ச்சிக்காக பெரும்பங்காற்றிய தோழர் மாரிமுத்து, இடது சாரி இயக்கங்களின் மீது அளவில்லாத பற்றுடையவர். உடல் நலக்குறைவால் கடந்த வருடம் விருப்ப ஓய்வில் சென்ற அவர், சிகிச்சை பலனளிக்காமல் திடீரென காலமானது ஒரு மிகப்பெரிய இழப்பாகும். 

அவரது மறைவிற்கு சேலம் மாவட்ட BSNLEU  தனது கொடி தாழ்த்திய அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், சக தோழர்களுக்கும், தனது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்