Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 14, 2020

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய ஒப்பந்த முறைக்கு எதிராக தொடர் போராட்டம்.

In House Software Development vs Outsourcing - When Time Matters

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக BSNL நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் கடுமையாக வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விரட்டும் விதமாக புதிய டெண்டர் முறையை நிர்வாகம் அமல் படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் K.G.போஸ் அணியின்  சங்கங்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உதயத்திற்கு பின், BSNL ஊழியர் சங்கமும், தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் ஒன்றாக இணைந்து நடத்திய எண்ணற்ற போராட்டங்களால், தொழிலாளர் நல ஆணையர் நிர்ணயித்த ஊதியம், பஞ்சப்படி, EPF, ESI மற்றும் போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றோம்.

அப்படி போராடி பெற்ற பல சலுகைகளை எல்லாம் பறிக்கும் விதமாக தற்போது புதிய டெண்டர் முறை வந்துள்ளது.

கொரோனா என்னும் பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, பத்து பதினைந்து மாதங்கள் ஊதியம் வராத நிலையிலும், இந்த ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றி வரும் சூழலில், சற்றும் இரக்கமின்றி அவர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் மாவட்ட, மாநில நிர்வாகங்கள் செயல்பட்டு வருவதை நாம் அனுமதிக்க முடியாது.

பெருந்தொற்று தீரட்டும், நாம் நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என காத்திருப்பதில் பயன் ஏதுமில்லை. பெருந்தொற்றின் தீங்கை விட நமது ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களில் உள்ள பசிக் கொடுமையின் தீங்கு அதிகம் என்ற அடிப்படையில் இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக போராடுவது என முடிவு எடுத்து போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று, 13.05.2020, மாலை இரண்டு மாவட்ட சங்கங்களின் மைய தோழர்கள், AUDIO CONFERENCE மூலமாக, நமது மாவட்டத்தில் போராட்ட இயக்கங்களை அமுல் படுத்துவது சம்மந்தமாக விவாதித்தோம். 

அதன்படி,

1. 15.05.2020, வெள்ளியன்று,  கிளைகளில் ஆர்ப்பாட்டம்

2. 18.05.2020, திங்கட்கிழமை அன்று,  கோரிக்கை பதாகை கையிலேந்தி,  கருப்பு துணியால் கண்களை மறைத்து கிளைகளில் ஆர்ப்பாட்டம். அன்றே, சேலம் நகர தோழர்கள் திரளாக சென்று LEO அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல். 

3. 20.05.2020, புதன்கிழமை அன்று,  ஒப்பந்த தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு. 

(பொது பேருந்து அனுமதி கிடைத்தால், சேலம் PGM அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு. பொது பேருந்து அனுமதி இல்லையென்றால், கோட்ட பொறியாளர்களை சந்தித்து பெருந்திரள் முறையீடு) 

கோரிக்கைகள்

BSNL நிர்வாகமே..

1) ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சேவை பாதிப்பு மற்றும் ஊழல் வாய்ப்புக்கு வழிவகுக்கும் OUTSOURCING டெண்டரை அமுல்படுத்தாதே. அமுல் படுத்திய இடங்களில் ரத்து செய்..

2) VRS -க்குப் பின்னர் ஆட்பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்காதே..

3) 10 முதல் 15 மாதங்கள் சம்பள நிலுவையை உடனே வழங்கிடு..பட்டினி போட்டு சாகடிக்காதே..

ஆணவங்களுக்கு எதிராக, அராஜகங்களை முறியடித்திட.. அணி திரண்டு போராடுவோம்.

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU