Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 8, 2020

பாரத பிரதமருக்கு AUAB சார்பாக கடிதம்

07-11-2019 அன்று நடைபெற்ற AUAB மற்றும் CMD ...

BSNLஐ அழிக்க தொடரும் சதிகள்- சதிகளை முறியடிக்க AUAB உறுதி


BSNLஐ அழிக்கும் சதிகளுக்கு முடிவே வராது போல் உள்ளது. கடந்த காலங்களில் BSNLன் வலைத்தளங்களை விரிவாக்க BSNL கருவிகள் வாங்கும் பொழுதெல்லாம் ஏற்பட்ட தடைகளால், அதன் விரிவாக்கமும் வளர்ச்சியும் தடைபட்டது என்பதை பலமுறை மக்களுக்கு அம்பலப்படுத்தி உள்ளோம். அது போன்ற முயற்சி தற்போதும் அரங்கேறுகிறது.

சமீபத்திய வில்லனாக TEPC (TELECOM EQUIPMENT AND SERVICES EXPORT PROMOTION COUNCIL) என்ற அமைப்பு முன்வந்துள்ளது. 50,000 4G மொபைல் டவர்களை வாங்குவதற்காக 23.03.2020 அன்று BSNL வெளியிட்டுள்ள டெண்டர், அந்த நிறுவனத்தின் புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டரின் விதிகள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பங்கு பெற முடியாத வண்ணம் உள்ளதாக அந்த TEPC புகார் கூறியுள்ளது. ” இந்த டெண்டரில் பங்கு பெறுபவர்களுக்கு குறைந்த பட்சம் 2 கோடி சந்தாதாரர்களுக்கான மொபைல்சேவைகள் வழங்கிய அனுபவம் இருந்திருக்க வேண்டும்” என்பது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள ஒரு கட்டுப்பாடு. பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து கருவிகள் வாங்குவது என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என ஆட்சேபனை தெரிவித்துள்ளது. BSNL நிறுவனத்தின் புத்தாக்கத்தில் பொது மக்கள் பணம் இருப்பதால், உள்நாட்டு நிறுவனங்களுக்கு BSNL வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் TEPC வாதிட்டுள்ளது. TEPC எழுப்பியுள்ள இந்த ஆட்சேபனைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதற்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

4G கருவிகளை வாங்க BSNL, தனது சொந்த நிதியினை தான் பயன்படுத்துகிறதே ஒழிய, அரசாங்கத்திடம் இருந்து பணத்தை பெறுவதில்லை. இப்போது கூட, 4G கருவிகளை வாங்க நோக்கியா நிறுவனத்தோடு ஒரு லட்சம் டாலர் ஒப்பந்தத்தை ஏர் டெல் போட்டுள்ளது. அதற்கெதிராக ஆட்சேபனை தெரிவிக்காத இந்த TEPC, BSNL மீது மட்டும் ஏன் பாய்கிறது? 

நோக்கியா, ZTE, எரிக்சன் போன்ற நிறுவனங்களிடம் இருந்து உலக தரம் வாய்ந்த கருவிகளை தனியார் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வொடோபோன் வாங்கி பயன்படுத்தும் போது, BSNLஐ மட்டும் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து, தரம் குறைந்த கருவிகளை வாங்க ஏன் நிர்பந்திக்க வேண்டும்? 

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டது. அவர்களால், தேசப்பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லையென்றால், BSNL வாங்கும் போது மட்டும் ஏன் ”தேசப்பாதுகாப்புக்கு ஆபத்து” என்பதை தூக்கி பிடிக்கின்றார்கள்? 

எனவே அவர்களின் வாதங்கள் அனைத்தும் சொத்தையானது மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டது. BSNLன் 4G கருவிகளை வாங்க தடைவிதிக்க நினைக்கும், இந்த சதிகளை AUAB உறுதியாக முறியடிக்கும்.

BSNLஐ பாதுகாக்கவும், பலப்படுத்தவும், கடந்த காலங்களில் AUAB பல போராட்டங்களையும், இயக்கங்களையும் முன்னெடுத்துள்ளது. BSNLக்கு, 4Gஅலைக்கற்றை இலவசமாக கிடைப்பதற்கு ஒரு முக்கியமான பாத்திரத்தை AUAB வகித்துள்ளது. தற்போதும், BSNLன் 4G கருவிகள் வாங்கும் முயற்சிகளை தடை செய்ய ஒரு சில சுய நல சக்திகள், சதியில் ஈடுபட்டுள்ளன. 

இது தொடர்பாக, பாரத பிரதமருக்கு, அனைத்து  AUAB தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதம் அனுப்ப பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
AUAB கடிதம் காண இங்கே சொடுக்கவும்