Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, December 19, 2019

ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனைக்காக BSNL CMD யுடன் சந்திப்பு

Related image

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில், BSNL ஊழியர் சங்கத்திற்கும், BSNL CMDக்கும் இடையே ஒரு விரிவான விவாதம் நடைபெற்றது.


2019, ஜனவரி மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை. இந்த பிரச்சனையில், BSNL ஊழியர் சங்கம் BSNL தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்துடன் (BSNLCCWF) இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த பிரச்சனையை BSNLன் உயர் மட்ட நிர்வாகத்துடன், BSNL ஊழியர் சங்கம் பலமுறை கடிதம் கொடுத்து விவாதித்துள்ளது. BSNL ஊழியர் சங்கமும் BSNL CCWFம் எடுத்த தொடர் முயற்சிகளின் காரணமாக அனைத்து மாநிலங்களுக்கு இல்லையென்றாலும், ஒரு சில மாநிலங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது. ஊதியம் கிடைக்காத நெருக்கடியில் ஏழு ஒப்பந்த தொழிலாளர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த பிரச்சனை பாராளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.

17.12.2019 அன்று  BSNL ஊழியர் சங்கம், BSNL CMD திரு P.K.புர்வார் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையிலும் இந்த பிரச்சனை ஆழமாக விவாதிக்கப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாததற்கு, மீண்டும் BSNLன் நிதி நெருக்கடியே BSNL CMD காரணம் காட்டினார். எனினும் இது ஒரு மனிதாபிமான பிரச்சனை என்றும், இது முன்னுரிமை அடிப்படையில் கவனிக்க வேண்டிய பிரச்சனை என்றும் நமது பொதுச்செயலாளரும், துணைப் பொதுச்செயலாளரும் சுட்டிக்காட்டினர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரவேண்டிய ஊதிய நிலுவையை ஒரே தவணையில் இல்லையென்றாலும், தவணை முறையிலாவது வழங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதை எடுத்துரைத்த தோழர்கள், ஒரு பகுதி நிலுவை தொகையையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கடுமையாக வாதிட்டனர். 

கூடிய விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக BSNL CMD உறுதி அளித்தார்.

ஊதிய நிலுவை தொகை பிரச்சனையோடு, பெருமளவிற்கு ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பிரச்சனையையும் BSNL ஊழியர் சங்க தலைவர்கள் BSNL CMDயிடம் எழுப்பினர். அவர் அதற்கு பதிலளிக்கையில், ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்களை BSNLல் வைத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார். BSNLல் ஒரு லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது சரியான வாதம் அல்ல என்று தொழிற்சங்க தலைவர்கள் மறுத்து கீழ்கண்ட விஷயங்களை சுட்டிக்காட்டினர்.

1) BSNLல் பணி புரிந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 80,000 ஆக இருந்திருக்கும். அதில் 30 முதல் 40 சதவிகித ஊழியர்களை ஒரு வருடத்திற்கு முன்னரே, மாநில நிர்வாகங்கள் பணி நீக்கம் செய்து விட்டன.
2) சமீபத்தில் மற்றுமொரு கட்ட பணி நீக்கம் நடைபெற்றுள்ளது.
3) மேலும் ஊதியம் தராத காரணத்தால், குறிப்பாக வட மாநிலங்களில் கணிசமான ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது வேலையை விட்டு விட்டு சென்று விட்டனர்.
4) எனவே சுமார் 40,000 ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.

விருப்ப ஓய்வு திட்டத்தில் 80,000 நிரந்தர தொழிலாளர்கள் வெளியேறியுள்ள சூழ்நிலையில், தற்போதுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை, எவ்வாறு லாபகரமாக பயன்படுத்துவது என்பது தொடரபாக நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்றும் தலைவர்கள் BSNL CMDஐ கேட்டுக் கொண்டனர். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் வயதினை கணக்கில் எடுத்து பரிசீலிக்கும் போது, அவர்களை வியாபார நடவடிக்கைகளில் பயன்படுத்துவதன் மூலம் BSNLம், ஒப்பந்த தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். 

தொழிற்சங்கத்தின் இந்தக் கருத்துக்களை பொறுமையுடன் கேட்ட BSNL CMD, இவற்றை சாதகமாக பரிசீலிக்க உறுதி அளித்தார். 

பல்வேறு மாநிலங்களில் தற்போது உண்மையில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் விவரங்களோடு, மீண்டும் ஸ்தூலமாக கணக்கெடுத்து,  அவர்களை எவ்வாறு லாபகரமாக பயன்படுத்துவது என விவாதிக்க மீண்டும் வருவதாக தொழிற்சங்கத்தின் தரப்பில் உறுதி அளித்தனர். 

ந்த பிரச்சனையை மீண்டும் விவாதிக்க BSNL CMD ஏற்றுக் கொண்டுள்ளார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: மத்திய சங்கம்