Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, December 16, 2019

ஊழியர் பிரச்சனை இணைந்த கடிதம்

Related image
ஊழியர்களின் ஊதியத்தி பிடித்தம் செய்யப்பட்ட தவணைகள் தொடர்பாக, அந்தந்த அமைப்புகளுக்கு தமிழ் மாநில நிர்வாகம் கடிதம் எழுத தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், NFTE சங்கமும் இணைந்த கடிதம்.


கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம், வங்கி, சொசைட்டி, LIC ஆகியவை உள்ளிட்ட அமைப்புகளுக்கு போகவில்லை. இதனால் ஊழியர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 

அந்த அலுவலகங்களுக்கு எல்லாம், நமது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து BSNL நிறுவனம் பிடித்தம் செய்ய வேண்டிய தொகைகளை பிடித்துள்ளது என்றும், கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து நிதி வந்தவுடன் அவை அந்த அமைப்புகளுக்கு செலுத்தப்படும் என்கின்ற கடிதத்தை அனைத்து அமைப்புகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், NFTE சங்கமும் இணைந்து தமிழ் மாநில தலைமை பொது மேலாளரை 13.12.2019 அன்று சந்தித்து கடிதம் கொடுத்து விவாதித்தது. 

இதற்கு ஆவன செய்வதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: மாநில சங்க வலைத்தளம்