ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாதது தொடர்பாக மாநிலங்களவையில் தோழர் K.K.ராகேஷ் MP கேள்வி எழுப்பினார்
29.11.2019 அன்று மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தோழர் K.K.ராகேஷ் அவர்கள் ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பினார். கடந்த பல மாத காலமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை சுட்டிக்காட்டி, அதன் காரணமாக பல ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டதையும் தெரிவித்தார்.
BSNLல் கடந்த பல ஆண்டுகளாக பணி புரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
தோழர் K.K.ராகேஷ் MP அவர்கள் கேரள மாநில BSNL CCWFன் தலைவருமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்க வலைத்தளம்