Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, December 26, 2019

நவம்பர் மாத சம்பளம் 31.12.2019க்குள் பட்டுவாடா செய்யப்படும்

Image result for salary


BSNL ஊழியர்களின் நவம்பர் மாத ஊதியம், 31.12.2019க்கு முன் வழங்கப்படும். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகள் அனைத்தும் 15.01.2020க்குள் வழங்கப்படும் என BSNL நிர்வாகம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. 

டெல்லி உயர்நீதி மன்றத்தில், ITS அதிகாரிகள் சங்கம் தொடுத்துள்ள ஒரு வழக்கில், BSNLக்காக வாதிடும் கூடுதல் தலைமை வழக்கறிஞர், 13.12.2019 அன்று வாதிடுகையில், BSNL ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் 31.12.2019 அன்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும்," ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், நிலுவை தொகைகள் அனைத்தும் 15.01.2020 க்குள் வழங்கப்பட்டு விடும்" என்றும் தெரிவித்துள்ளார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: மத்திய/மாநில சங்கங்கள்