BSNLEU, BTEU (BSNL), NUBSNLW(FNTO), BSNLMS, BSNL ATM, BSNLOA ஆகிய சங்கங்கள், அகில இந்திய அளவில், திரு அன்ஷூ பிரகாஷ், DOT செயலாளர் மற்றும் திரு.P.K.புர்வார் BSNL CMD ஆகியோருக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு
21.11.2019
ஐயா,
பொருள்:- 25.11.2019ல் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்வது- தொடர்பாக.
DOTயும் BSNLம் BSNLல் நிர்பந்தப்படுத்தப்பட்ட ஓய்வு திட்டத்தை(FRS) அமல் படுத்துகின்றனர். BSNL நிர்வாகம், ஊழியர்களை மிரட்டி விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல கட்டாயப்படுத்துகிறது. ”BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. அது ஊழியர்கள் தன்னிஷ்டப்படியே தான் இருக்கும்” என 23.10.2019 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெளிவாக தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக, ஓய்வு பெறும் வயது குறைக்கப்படும் என்றும், தொலை தூர பகுதிக்கு மாற்றலில் அனுப்பப்படுவார்கள் என்றும், பண்னிச்சுமை அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை தெரிவித்து ஊழியர்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் அனுப்ப BSNL நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது.
CCS பென்சன் விதிகள் 1972ன் படி, ஒரு ஊழியர், ஓய்வு பெற்ற ஓராண்டுக்குள், பென்சன் COMMUTATIONக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். இல்லையென்றால் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். மேலும், பென்சன் COMMUTAION விண்ணப்பிப்பதற்கு முன் ஒருவர் இறந்து விட்டால், அவரது குடும்பத்திற்கு அந்த பலன் கிடைக்காது. VRS-2019ன் படி விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லும் ஊழியர், 60 வயதை அடைந்த பின்னர் தான் பென்சன் COMMUTAIONக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, இயற்கையாகவே, விருப்ப ஓய்வு திட்ட்த்தில் செல்லும் ஊழியர்கள் பென்சன் COMMUTATION பெற கடுமையாக சிரமப்பட வேண்டி இருக்கும். CCS பென்சன் விதிகள் 1972ல் தேவையான திருத்தங்களை செய்யாமலயே DOTயும் BSNL நிர்வாகமும், ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல நிர்ப்பந்திக்கின்றன.
அதே போல, BSNLல் மூன்றாவது ஊதிய மாற்றம் முன் தேதியிட்டு அமலாக்கப் பட்டது என்றால், விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கும், அதன் பயன் கிடைக்கும் என்பதற்கு தேவையான உறுதி மொழி வழங்கப்பட வேண்டும். IFCI Ltd மற்றும் சஞ்சய் பிகாரி மற்றும் இதரர்களுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் (C.A.NO.6995/2019) 17 செப்டம்பர், 2019ல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதில் ‘VRS என்பது ஒரு தொகுப்பு. VRS திட்டத்தில் என்ன குறிப்பிட்டிருக்கிறதோ, அதை தாண்டி வேறு எதையும் விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்கள் கேட்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஒட்டி, விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு, முன் தேதியிட்டு அமலாக்கப்படும் மூன்றாவது ஊதிய மாற்றம் பொருந்தும் என சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக, DOTயும், BSNLம் தெளிவாக்க வேண்டும்.
மேற்கண்ட விஷயங்கள் தொடர்பாக DOTயும் BSNL நிர்வாகமும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தயாரில்லாத காரணத்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சங்கங்கள், கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 25.11.2019 அன்று மாவட்ட, மாநில மற்றும் கார்ப்பரேட் அலுவலக மட்டங்களில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
கோரிக்கைகள்
அ) விருப்ப ஓய்வு திட்டத்தில் பென்சன் COMMUTATION பெறுவதில் உள்ள தடைகளை நீக்கும் வகையில் CCS PENSION RULES-1972ல் தேவையான திருத்தங்களை கொண்டு வருக.
ஆ) முன் தேதியிட்டு மூன்றாவது ஊதியமாற்றம் நடைபெற்றால், விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கும், அதற்கான பலன்களை உறுதி செய்ய வேண்டும்.
2) BSNL ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை குறைக்கக் கூடாது. BSNLஆக மாறும் போது, BSNLன் 02.01.2001 தேதியிட்ட கடித எண் BSNL/4/SR/2000ல் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று செயல்படு. அதில், “BSNLல் உள்ள அனைத்து ஊழியர்களுக்குமான ஓய்வு பெறும் வயது என்பது அரசு விதிகளின்படி செயலாக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
3) ஓய்வு பெறும் வயதை குறைப்பது, பணியிட மாற்றம், பணிச்சுமை உள்ளிட்டவை தொடர்பாக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல கட்டாயப்படுத்தாதே.
4) BSNLல் 4G சேவையை உடனடியாக துவக்கு.
5) காலதாமதமின்றி 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு.
6) BSNL ஓய்வூதியதாரருக்கு, உடனடியாக ஓய்வூதிய மாற்றத்தை அமலாக்கு. ஊதிய மாற்றத்திலிருந்து ஓய்வூதிய மாற்றத்தை பிரித்துவிடு.
7) ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியத்தை வழங்கி விடு.
8) ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 2019, மே மாதத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட GPF, சொசைட்டி கடன்கள், வங்கி மாத தவணை, LIC கட்டணம், சங்க சந்தா உள்ளிட்டவைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கி விடு.
9) ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதிய தொகையை உடனடியாக வழங்கி விடு.
10) விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்ட பின் ஏற்படும் நிலைமைகளில், பணியிட மாற்றல், ஊழியர்களை பயன்படுத்துவது மற்றும் BSNLன் கட்டமைப்பு தொடர்பாக உடனடியாக தொழிற்சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்து. இந்த பிரச்சனைகளில் சங்கங்களை புறந்தள்ளி விட்டு, தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே.
11) நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் பிரச்சனையில் உடனடியாக தீர்வு காண்க.
மேற்கண்ட பிரச்சனைகளில் உடனடியாக தீர்வு காண நடவடிக்கைகளை DOTயும் BSNLம் எடுக்க வில்லையெனில், விருப்ப ஓய்வு திட்டம்-2019க்கு விருப்பம் தெரிவித்துள்ள ஊழியர்களை, வாபஸ் பெற்றுக் கொள்ள அறைகூவல் விடவேண்டியிருக்கும் என தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
BSNLEU, BTEU(BSNL), NUBSNLW(FNTO), BSNL MS, BSNL ATM, BSNL OA பொதுச்செயலாளர்கள்.
மத்திய சங்க தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள போர் பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்