Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 2, 2019

உரிய தேதியில் ஊதியம் வழங்கக்கோரி UAB சார்பாக ஆர்ப்பாட்டம்


உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், மூன்றாவது ஊதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர் 8 மாத ஊதியம்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 01.10.2019, BSNL அமைப்பு தினத்தன்று, நாடுமுழுவதும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, அகில இந்திய UAB அறைகூவல் கொடுத்திருந்தது. 

பெரும்பான்மை ஊழியர்கள், அதிகாரிகளை பிரதிநிதித்துவபடுத்த கூடிய சங்கங்களான, BSNLEU , SNEA, AIBSNLEA சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, 01.10.2019 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பு, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

போராட்டதிற்கு தோழர்கள் S . ஹரிஹரன், (BSNLEU), N .சந்திரசேகரன் (SNEA), S . ராமசந்திரன் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர். 

AIBSNLEA சேலம் மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம் துவக்கவுரை வழங்கினார். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, SNEA மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் R . மனோகரன், AIBSNLEA மாநில அமைப்பு செயலர் தோழர் R . மணிகண்டன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

தோழர் G. சேகர், மாவட்ட செயலர், SNEA, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜு நன்றி கூறி போராட்டத்தை முடித்துவைத்தார். BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம், ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினார். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 150 ஊழியர்கள், அதிகாரிகள் (50 பெண் தோழர்கள் உட்பட) திரளாக கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துணை தோழர், தோழியர்களுக்கும், சேலம் மாவட்ட UAB சார்பாக, பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்