BSNLன் புத்தாக்கத்திற்கு கடைசியான நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது- CMD BSNL
AUABயுடன் நடைபெற்ற கூட்டத்தில் CMD BSNL திரு P.K.புர்வார் அவர்கள் உரையாற்றும் போது, BSNLன் நிதி புத்தாக்கத்திற்கு இறுதியான, அதே சமயம் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என உணர்ச்சிகரமாக தெரிவித்தார். BSNLன் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கு அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
4G அலைக்கற்றை ஒதுக்கீடு, நிதியுதவி ஆகியவற்றுடன் ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது, BSNLன் புத்தாக்கத்திற்கு கிடைத்துள்ள நல்லதொரு வாய்ப்பு என CMD BSNL சுட்டிக்காட்டினார். BSNLல் உள்ள அனைவரும், தேவைக்கேற்ப பணியாற்றி, சேவையின் தரத்தை உயர்த்தவும், மேலும் நாட்டின், நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்