Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, October 24, 2019

மத்திய மந்திரிசபை கூட்ட முடிவுகள்

Image result for ravi shankar prasad


23.10.2019, நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் தொலைத்தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத், BSNL புத்தாக்கம் சம்மந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார்.  பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய, இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மூடப்படவோ, பங்கு விற்பனை செய்யவோ மூன்றாம் நபரால் முதலீடு செய்யப்படவோ அரசாங்கம் அனுமதிக்காது என முதலில் தகவல் தெரிவித்தார்.  அவரின் செய்தியாளர் சந்திப்பு செய்திகளை PRESS INFORMATION BUREAU வெளியிட்டுள்ளது. 

அதன் தமிழாக்கம் சுருக்கமாக:

1. BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 4G ஸ்பெக்ட்ரம் வழங்கப்படும். இதற்கான செலவான, 20,140 கோடி ரூபாய், மற்றும் GST தொகையான 3,674 கோடி ரூபாய் செலவை அரசு ஏற்கும். இதன்மூலம், BSNL நிறுவனம் 4G சேவை அனைத்து பகுதிகளிலும் வழங்க முடியும்.

2. மத்திய அரசின் இறையாண்மை உத்தரவாதத்துடன், சுமார் 15,000 கோடி ரூபாய் நீண்ட கால கடன் பாத்திரங்களை BSNL வெளியிடும். அதன்மூலம், BSNL நிதி நெருக்கடி போக்கப்படும், முதலீட்டு, பராமரிப்பு செலவுகள் மேற்கொள்ளப்படும்.

3.ஐம்பது வயது கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  17,169 கோடி ரூபாய் மதிப்பிலான (EXGRATIA) கூடுதல் பரிவுத் தொகை, ஓய்வூதியம், பணிக்கொடை, கம்முடேஷன் ஆகிய செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்.

4. நில மேலாண்மை திட்டம் மூலம் பெறப்படும் நிதி, BSNL நிறுவனத்தின் கடன், விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்களுக்கு செலவு செய்யப்படும்.

5. BSNL மற்றும் MTNL நிறுவனங்களை இணைக்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், BSNL நிறுவனம் ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் தங்கள் சேவையை மேலும் தரமாக வழங்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

குறிப்பு: தோழர்களே! மேற்கூறிய விஷயங்கள் மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் செய்தியின் தமிழாக்கமே. இதன் மீதான நமது சங்க கருத்துக்கள், மத்திய சங்கம் விளக்கியவுடன் நாம் வழங்குவோம். BSNL நிறுவன நலன், ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளில் சில முன்னேற்றங்கள் தெரிந்தாலும் கூட, நாம் தொடர்ந்து எதிர்க்கும் BSNL - MTNL இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை ஏற்கமுடியாது.

24.10.2019 மாலை 4 மணிக்கு, BSNL CMD, AUAB தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். அதன்பின், முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
PIB செய்தி குறிப்பு காண இங்கே சொடுக்கவும்