Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, October 26, 2019

AUAB தலைவர்கள் BSNL CMDஐ சந்தித்து விவாதம்

Image result for bsnl cmd purwar
புத்தாக்கத் திட்டம் தொடர்பாக விவாதித்தனர் 


24.10.2019 அன்று AUAB தலைவர்கள் BSNL CMD அவர்களை சந்தித்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புத்தாக்கத் திட்டம் தொடர்பான ஒரு சில விஷயங்களை விவாதித்தனர். நிர்வாகத்தின் சார்பில் திரு அரவிந்த் வட்னெர்கர் DIRECTOR(HR) மற்றும் திரு A.M.குப்தா GM(SR) ஆகியோரும் உடன் இருந்தனர். AUAB சார்பில், தோழர் P.அபிமன்யு அமைப்பாளர், தோழர் சந்தேஸ்வர் சிங் தலைவர், தோழர் K.செபாஸ்டின் GS SNEA, தோழர் S.சிவகுமார் GS AIBSNLEA, தோழர் சுரேஷ் குமார் GS BSNL MS, தோழர் மொஹிந்தர் CS NTR FNTO, தோழர் சந்தீப் குமார் AGS தோழர் ரேவதி பிரசாத் BSNL ATM மற்றும் தோழர் H.P.சிங் GS BSNLOA ஆகியோர் பங்கு பெற்றனர். 

கூட்டத்தின் துவக்கத்தில், BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் இதர நிதி உதவிகளை வழங்குவதற்கான ஒப்புதலை அரசிடம் பெறுவதற்கு CMD BSNL திரு P.K.புர்வார் எடுத்த முயற்சிகளை தலைவர்கள் பாராட்டினார்கள்.

கீழ்கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன:- 

a. ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கக் கூடாது:- ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் இன்னமும் DoT/அரசிடம் உள்ளதாக, 24.11.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கூட BSNL CMD தெரிவித்தார். ஓய்வு பெறும் வயதை ஏன் 58 ஆக குறைக்கக் கூடாது என்பதற்கான காரணங்களுடன், மேலே குறிப்பிட்ட அனைத்து தலைவர்களும் கையெழுத்திட்ட கடிதத்தை AUAB தலைவர்கள் BSNL CMDயிடம் வழங்கினர். அந்த கடிதத்தை அரசிற்கு அனுப்புவதாக BSNL CMD உறுதி அளித்தார். 

b. விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்படுவதால் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறையை சந்திப்பது:- விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டதிற்கு பின் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், பணிச்சுமை கடுமையாக உயரும் என்பதை AUAB தலைவர்கள் சுட்டிக் காட்டினார்கள். பொருத்தமான மாற்று ஏற்பாடுகள் சரியாக செய்யப்படவில்லை எனில் சேவையின் தரம் கடுமையாக மோசமாகும் என்பதையும் தெரிவித்தனர். AUAB தலைவர்களின் கருத்தை CMD BSNL ஏற்றுக் கொண்டார். எனினும், நிலைமை தற்போது தெளிவில்லாமல் இருப்பதால், சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

c. சட்டப்படி, PENSION COMMUTATION, ஊழியர்கள் உயிரோடு இருக்கும் போது தான் செய்ய முடியும்:- தற்போதைய அமைச்சரவை முடிவின் அடிப்படையில், விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்கள், தங்கள் உண்மையான ஓய்வு பெறும் தேதியன்று தான் ஓய்வூதியத்தை COMMUTE செய்ய முடியும். அப்படி விருப்ப ஓய்வில் சென்றவர்கள் உண்மையாக ஓய்வு பெறும் தேதிக்கு முன் இறந்து விட்டார் எனில், அவருடைய குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை COMMUTE செய்யும் பலன் கிடைக்காது போய் விடும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என AUAB கோரியது. அதில் தேவையானவற்றை செய்வதாக BSNL CMD உறுதி அளித்துள்ளார். 

d. ஓய்வூதிய தீர்வுகளை சரி செய்து கொள்ள வசதியாக அதிகாரிகளை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவது:- ஏற்கனவே தொலை தூரத்திற்கு மாற்றலில் அனுப்பப்பட்டு, தற்போது விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேற விரும்பும் அதிகாரிகளை, ஓய்வூதிய தீர்வுகளை சரி செய்து கொள்ள வசதியாக, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு உடனடியாக மாற்றலில் அனுப்ப வேண்டும் என AUAB கேட்டுக் கொண்டது. தங்களின் சொந்த மாநிலத்தில் தான் ஓய்வூதியம் தீர்வு காண முடியும் என்ற வாதத்தை தலைவர்கள் முன்வைத்தனர். இந்த கவலையை ஏற்றுக் கொண்ட BSNL CMD, இந்த பிரச்சனையில் தேவையான நடவடிக்கைகளை மெற்கொள்வதாக உறுதி அளித்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்