01.10.2019, மதியம் 12.00 மணி, சேலம் PGM அலுவலகம்
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும், 3ஆவது ஊதிய மாற்றம் அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU, SNEA, AIBSNLEA, BSNLMS, BSNLATM மற்றும் BSNLOA மத்திய சங்கங்கள், 01.10.2019, BSNL அமைப்பு தினத்தன்று மதிய உணவு இடைவேளையில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் கொடுத்துள்ளது.
கோரிக்கைகள் சுருக்கமாக
1. BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்க வேண்டும். நில மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
2. BSNL ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும்
3. ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்
4. மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்த வேண்டும்
5. BSNL பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த 2000ம் ஆண்டு கொடுத்த உறுதிமொழியை அமுலாக்க வேண்டும்.
6. ஆட்குறைப்பு, ஓய்வு பெறும் வயது 58ஆக குறைக்க கூடாது.
7. அரசு விதிப்படி ஓய்வூதிய பங்களிப்பு செலுத்த வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, BSNLEU, SNEA, AIBSNLEA சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, 01.10.2019 BSNL அமைப்பு தினத்தன்று, மதியம் 12.00 மணி அளவில், சேலம் PGM அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டம் முழுவதிலுமிருந்து, தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
ஒன்றுபட்டு போராடுவோம்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம்!!
தோழமையுடன்,
E . கோபால், BSNLEU
G. சேகர், SNEA
M . சண்முகசுந்தரம், AIBSNLEA
மாவட்ட செயலர்கள், சேலம் மாவட்டம்
மத்திய சங்கங்களின் போராட்ட பிரகடனம் காண இங்கே சொடுக்கவும்