Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, August 29, 2019

ஒய்யாரமான ஒன்பதாவது மாவட்ட மாநாடு


நமது மாவட்ட சங்கத்தின் 9வது மாநாடு, ஆத்தூர் பாக்கியா திருமண மண்டபத்தில், 22.08.2019 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார்.

முதல் நிகழ்வாக, தோழர் S . ரங்கசாமி, திருச்செங்கோடு, தேசிய கொடியையும், தோழர் P .A .ஆறுமுகம், நாமகிரிப்பேட்டை சங்க கொடியையும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தனர். தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின், மாவட்ட உதவி செயலர் தோழர் M. சண்முகம் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

வரவேற்பு குழு பொது செயலர் தோழர் S . ஹரிஹரன், வரவேற்பு குழு சார்பாக அனைவரையும் வரவேற்றார். பின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்கம் சார்பாக அனைவரையும் வரவேற்றார்.

தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதா கிருஷ்ணன், முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவர்தம் உரையில், BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை, 8வது சரிபார்ப்பு தேர்தல் வியூகம், மத்திய, மாநில விரிவடைந்த செயற்குழுக்கள், ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சனைகள்,  உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். மாநில செயலர் உரைக்குப்பின், சமீபத்தில் நமது பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்ட தோழர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர். மாநில சங்கத்திற்கு, ரூ.20,000 நன்கொடை வழங்கினோம்.

அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, பின்னர் சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், BSNL நிறுவன புத்தாக்கம், நிதி நிலை, நாடு முழுவதும் 8வது சரிபார்ப்பு தேர்தலில் நமது சங்கத்திற்கு உள்ள பேராதரவு, வெற்றி வாய்ப்புக்கள், ஊழியர் தரப்பு கோரிக்கைகளின் தற்போதைய நிலை, VRS, ஓய்வு பெறும் வயது குறைப்பு, நில மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி நீண்ட ஒரு சிறப்புரை வழங்கினார். மாநாட்டிற்கு வந்திருந்த தோழர்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.

AGS பேசி கொண்டிருக்கும்போதே, சேவை கருத்தரங்கில் பங்கு பெறுவதற்காக சேலம் மாவட்ட PGM உயர்த்திரு. S . சபீஷ், உயர் அதிகாரிகளுடன் வருகை புரிந்தார்.AGS உரைக்குப்பின், தோழமை சங்க நிர்வாகிகள் தோழர்கள் கமலக்கூத்தன் (FNTO), சேகர் (SNEA), சண்முகசுந்தரம்(AIBSNLEA) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர், சேவை கருத்தரங்கம் துவங்கியது. மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அவர்களின் அறிமுக உரைக்கு பின், உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. T . ராஜேந்திரன், துணை பொது மேலாளர்கள் திருமதி D. லீலாரணி (நிர்வாகம்), திரு. M .முத்துசாமி (நிதி), ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S .தமிழ்மணி கருத்துரைக்குப்பின், இறுதியாக, சேலம் மாவட்ட முதன்மை பொது மேலாளர் திரு. S . சபீஷ் சேவை சம்மந்தமாக உரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில் BSNL வருவாய், FTTH, 4G உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார். 

மாநாடு உணவு இடைவேளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின், BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், CITU மாவட்ட நிர்வாகி தோழர் முருகேசன், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதற்குப்பின், பொருளாய்வு குழு துவங்கியது. ஆண்டறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.  பின்னர் நடைபெற்ற விவாதத்தில், சார்பாளர் தோழர்கள் கருத்து வழங்கினர். அறிக்கை ஏகமனதாக ஏற்கப்பட்டது. வரவு செலவு கணக்கை தோழர் P . தங்கராஜு தாக்கல் செய்தார், ஏகமனதாக ஏற்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் S . ஹரிஹரன், E . கோபால், P. தங்கராஜூ,  முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து விடுபடும் தோழர்கள், வரவேற்பு குழு தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். தோழர் K . ராஜன், புதிய மாவட்ட அமைப்பு செயலர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.

வழி எங்கும் கொடிகள், தோரணங்கள், நெஞ்சுரமேற்றும் தியாகிகள் ஸ்தூபி, மாநாட்டு அரங்கம் முழுவதும் தட்டிகள், அருமையான மண்டபம், சுவையான உணவு, அன்பான உபசரிப்பு, நேர்த்தியான நிகழ்ச்சி நிரல் என பல வகையில் அசத்திய ஆத்தூர் வரவேற்பு குழு தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மாநாட்டில் சுமார் 450 தோழர்கள் பங்கு பெற்றது சிறப்பான விஷயம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்