ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், ஆட்குறைப்பு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், BSNLEU மற்றும் BSNLCCWF சார்பாக, நாடு முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும், 16.07.2019 அன்று தர்ணா போராட்டம் நடத்த மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, சென்னையில், தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், தர்ணா போராட்டம் மிக எழுச்சியாக, சக்திமிக்கதாக நடைபெற்றது. மாநிலம் முழுவதிலுமிருந்து 1500க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நமது மாவட்டத்திலிருந்து 74 தோழர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்ட வரலாற்றில் மைல்கல் பதித்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அத்துனை தோழர்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துக்கள்.
போராடாமல் பெற்றதில்லை!
போராடி தோற்றதில்லை!!
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU
 
























