20.07.2019 அன்று நாமக்கல் நகர, ஊரக கிளைகளின் 9வது இணைந்த மாநாடு, நாமக்கல் தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் ராஜகோபால் (நகரம்), செல்வராஜ் (ஊரகம்) கூட்டு தலைமை தாங்கினர். முதல் நிகழ்வாக சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே மூத்த தோழர் செல்வராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட உதவி செயலர் தோழர் S . ராமசாமி அஞ்சலியுறை நிகழ்த்தினார். நகர கிளை செயலர் தோழர் பாலசுப்ரமணியன் வரவேற்புரை வழங்கினார்.
தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜ், P . செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் R . ரமேஷ் (பரமத்தி வேலூர்), N . பாலகுமார் (GM அலுவலகம்), P .M .ராஜேந்திரன் (ராசிபுரம்), AIBDPA மாவட்ட நிர்வாகி தோழர் கோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட செயலர் தோழர் E . கோபால் மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.
செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் நகர கிளை தலைவராக தோழர் ராஜகோபால், கிளை செயலராக தோழர் பாலசுப்ரமணியன், பொருளராக தோழர் வரதராஜன், ஊரக பகுதி கிளை தலைவராக தோழர் சின்னசாமி, கிளை செயலராக தோழர் செல்வராஜ் , பொருளராக தோழர் முத்துக்குமார் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கனகராஜ் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றியபின், தோழர் ரவிமணி நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். கொடிகள், தோரணங்கள், அமைதியான இடம், அன்பான உபசரிப்பு, சுவையான உணவு, உறுப்பினர்களின் திரளான பங்கேற்பு என அனைத்து வகையிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்த கிளை சங்கங்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட தோழர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்