BSNL ஊழியர் சங்கம்
மத்திய சங்கம்
BSNLEU/604(DEV) 06.06.2019
பெறுனர்
திரு ரவி ஷங்கர் பிரசாத் அவர்கள்,
மத்திய தொலை தொடர்பு அமைச்சர், சஞ்சார் பவன்,
20, அசோகா சாலை, புதுடெல்லி-110001.
ஐயா,
பொருள்:- BSNLன் புத்தாக்கம் தொடர்பான முக்கிய பிரச்சனைகள்- தொடர்பாக.
மத்திய தொலை தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களை, BSNLன் முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமான BSNL ஊழியர் சங்கம் முதலில் மனமார வரவேற்கிறது. இந்த சமயத்தில், தேச நலன்களுக்காக BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வலுவுடன் இருக்க வேண்டும் என்கிற தங்களின் அறிக்கையினை BSNL ஊழியர் சங்கம் வரவேற்பதுடன் உற்சாகமாக பாராட்டுகிறது. BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தொழில் பண்பட்டும், போட்டி மனப்பான்மையுடனும் திகழ வேண்டும் என்கிற உங்களின் பார்வையையும் BSNL ஊழியர் சங்கம் ஏற்றுக் கொள்கிறது. இது தொடர்பாக, 2004ஆம் ஆண்டிலிருந்து பத்தாண்டு காலத்திற்கு BSNLஐ வளர்ச்சியடைய அனுமதிக்கவில்லை என கடந்த முறை தாங்கள் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த போது வெளியிட்ட அறிக்கையினை நாங்கள் நினைவு கூறுகிறோம். BSNLஐ வலுப்படுத்தும் உங்கள் முயற்சியிக்கு BSNL ஊழியர் சங்கம் எப்பொழுதும் துணை நிற்கும் என உறுதி அளிக்கிறோம்.
ரிலையன்ஸ் ஜியோவின் கழுத்தறுப்பு விலை குறைப்பின் காரணமாக ஒட்டுமொத்த தொலை தொடர்பு துறையே கடுமையான அழுதத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இல்லை. இதன் காரணமாக ஏர்டெல். வொடோபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலை தொடர்பு சேவை தரும் நிறுவனங்களும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனினும், இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும், ரிலையன்ஸ் ஜியோவிற்கு அடுத்த படியாக ஒவ்வொரு மாதமும் BSNL நிறுவனம் மட்டுமே தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவு படுத்தி கொண்டே உள்ளது. இத்தகைய சூழலில், BSNLக்கு விரைவில் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதென்றால், அதன் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்த முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
BSNL உருவாகும் சயமத்தில், அதாவது செப்டம்பர், 2000ல் மத்திய அமைச்சரவை எடுத்த இரண்டு முக்கியமான முடிவுகள் அமலாக்கப்படாமல் உள்ளது என்பதை இந்த தருணத்தில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருவது எங்கள் கடமை. BSNLன் புத்தாக்கத்திற்கு இந்த முடிவுகள் மிக மிக அவசியமானது. BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்பது முதல் முடிவு. எழுத்தில் உள்ள அதே ஊக்கத்துடன் அந்த முடிவு அமலாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலாகாவின் சொத்துக்களும் கடன்களும் BSNL நிறுவனத்திற்கு மாற்றப்படும் என்பது இரண்டாவது முடிவு. கடன்கள் அனைத்தும் மாற்றப்பட்ட நிலையில் சொத்துக்கள் இன்னமும் மாற்றப்படவில்லை. இவற்றில் நீங்கள் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
BSNLன் பொருளாதார புத்தாக்கத்திற்காக செய்கிறோம் என்கின்ற பெயரில், விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்குவதற்கும், ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆக குறைப்பதற்குமான முயற்சிகளில் தொலை தொடர்பு துறையும் BSNLம் நடவடிக்கை எடுத்து வருவதை இந்த தருணத்தில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். தற்போதுள்ள 1,65, 657 ஊழியர்களில், இன்னமும் நான்கு ஆண்டுகளில், அதாவது ஏப்ரல் 2024க்குள் 79,295 ஊழியர்கள் ஓய்வு பெற உள்ள நிலையில், BSNLல் விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்க துடிப்பதற்கு என்ன தேவை உள்ளது என தெரியவில்லை. அதே போல அப்போதிருந்த அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனங்களிடம், 2000ஆம் ஆவது ஆண்டில் அரசாங்கம், ஓய்வு பெறும் வயதை பொருத்த வரை அராஅங்க உத்தரவுகளே BSNLக்கும் பொருந்தும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளது. இந்த பிரச்சனைகளில் தாங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேல் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் காலியிடங்கள் நாடு முழுவதும் உள்ளன என்பது BSNL நிறுவனத்தின் புத்தாக்கத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான விஷயம். இந்த காலியிடங்களை வாடகைக்கு/ குத்தகைக்கு விடுவதன் மூலம் ஆண்டொன்றுக்கு 5,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என BSNL நிர்வாகம் மதிப்பிட்டுள்ளது. நிலங்களை பணமாக்கும் BSNLன் இந்த திட்டத்திற்கு DoT இதுவரை ஒப்புதல் தரவில்லை. அதே போல ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான பிரச்சனையில் இந்திய அரசாங்கத்தின் உத்தரவு இதுவரை அமலாக்கபடாமல் உள்ளதன் விளைவாக, ஓய்வூதிய பங்களிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் அளவிற்கு அதிகமான பணம் BSNLலிடம் இருந்து பெறப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் DoT விரைவில் முடிவு எடுத்தது என்றால், அது BSNLன் பொருளாதார புத்தாக்கத்திற்கு பெரிய அளவில் உதவி செய்யும்.
இறுதியாக, ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்ற அமலாக்கம் மற்றும் BSNL ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றம் ஆகிய பிரச்சனைகள் BSNL ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளாகும். இந்த இரண்டு பிரச்சனைகளையும் சாதகமாகவும், விரைவாகவும் தீர்வு காண்பது என்பது BSNLன் புத்தாக்கத்திற்காக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு பெருமளவு ஊக்கம் தரும்.
இந்த பிரச்சனைகளில் பரிவுடன் கவனம் செலுத்தி சாதகமான தீர்வை ஏற்படுத்தி தருமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
-ஒம்-
(P.அபிமன்யு)
பொதுச்செயலாளர்
நகல்:-
1) திரு நிருபேந்திர மிஷ்ரா, பிரதமரின் முதன்மை செயலாளர், புது டெல்லி.
2) திருமிகு அருணா சுந்தர்ராஜன் செயலாளர், DoT., புதுடெல்லி.
3) திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா BSNL CMD., புதுடெல்லி.
கடிதம் காண இங்கே சொடுக்கவும்