BSNL எம்ப்ளாயீஸ் யூனியன், திருச்செங்கோடு நகர, ஊரக, பள்ளிபாளைய கிளைகள் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க, திருச்செங்கோடு கிளைகளின் இணைந்த மாநாடு, 26.05.2019 அன்று திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமைக்குழுவாக, தோழர்கள் P . தங்கராஜ், P . செந்தமிழ்செல்வன், A . தாமரைச்செல்வன், A . கோபாலன் ஆகியோர் செயல்பட்டனர். முதல் நிகழ்வாக, BSNLEU சங்க கொடியை தோழர் V. நாராயணன், கிளை தலைவர் ஏற்றிவைத்தார். TNTCWU சங்க கொடியை தோழர் K . ராதாகிருஷ்ணன், ஏற்றி வைத்தார். தியாககிகளுக்கு அஞ்சலி செலுத்தியபின், அஞ்சலியுறை தோழர் K . செல்வராஜ் வழங்கினார். தோழர் பரந்தாமன், கிளை செயலர், பள்ளிபாளையம் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் S . தமிழ்மணி, BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார். தோழர் C .பாஸ்கர், TNTCWU மாநில உதவி செயலர், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஹரிஹரன், சண்முகம், ராமசாமி வாழ்த்துரை வழங்க, தோழர் M . செல்வம், TNTCWU சேலம் மாவட்ட செயலர் மற்றும் தோழர் E . கோபால், BSNLEU சேலம் மாவட்ட செயலர் மாநாட்டு பேருரை வழங்கினார்கள்.
செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. தோழர்கள் C . ஆண்டியப்பன், (திருச்செங்கோடு நகரம்) தோழர் K . செல்வராஜூ( திருச்செங்கோடு ஊரகம்), தோழர் V. பரந்தாமன்( பள்ளிபாளையம்), தோழர் K . வெங்கடேஸ்வரன் (TNTCWU திருச்செங்கோடு) கிளை செயலர்களாக கொண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் ராஜலிங்கம் நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்