Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 24, 2019

மத்திய சங்க செய்திகள்

Image result for bsnleu chq


வணிக பகுதி இணைப்பு விவகாரம் 

தொலைத்தொடர்பு மாவட்டங்களை வணிக பகுதிகள் இணைப்பு என்ற போர்வையில் அருகில் உள்ள மாவட்டங்களோடு இணைக்கும் முயற்சி சம்மந்தமாக, நமது பொது செயலர்  கார்ப்பரேட் அலுவலக உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து விவாதித்தார். 22.05.2019 அன்று தள மட்ட கவுன்சில், மாவட்ட சங்கங்கள், ஊழியர் மாறுதல் நிலையில் பழைய நிலை நீடிக்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, 23.05.2019 அன்று திரு. A . M .குப்தா, GM(SR) அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் நமது பொது செயலர் பழைய நிலை நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  கோரிக்கையை  பரீசீலிப்பதாக GM(SR) உறுதி அளித்தார். 

JE இலாக்கா போட்டி தேர்வு 

நடைபெறவுள்ள JE இலாக்கா போட்டி தேர்வு கேள்விகளை சுலபமாக இருக்கும்படி தயாரிக்க வேண்டும் என நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 29.04.2019 தேசிய கவுன்சில் கூட்டத்தில் இந்த பிரச்னையை கொடுத்து விவாதித்தோம். அதன் தொடர்ச்சியாக, மீண்டும் GM(Rectt) அவர்களுக்கு மத்திய சங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. 

ஒப்பந்த ஊழியர் சம்பள நிதி விவகாரம் 

23.05.2019 அன்று நமது பொது செயலர் மற்றும் BSNLCCWF பொது செயலர் இணைந்து திரு. P . C . பந்த் Sr.GM(CBB) அவர்களை நேரில் சந்தித்து ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடாவிற்கான நிதியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். நிதி நெருக்கடி கடுமையாக உள்ளதாகவும், ஏற்கனவே இந்த மாதத்தில் 24 கோடி ரூபாய் House - keeping பிரிவிற்கு வழங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார். இருப்பினும், நிதியை விரைந்து வழங்க  முயற்சிகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார். 

கனரா மற்றும் யூனியன் வங்கிகளின் MoU புதுப்பிப்பு

நமது  பொது செயலர், 15.05.2019 அன்று மீண்டும் திரு ராம் கிருஷ்ணா DGM(CBB) அவர்களை சந்தித்து கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை புதுப்பிப்பது தொடர்பாக விவாதித்தார். அந்த பணியில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த DGM(CBB), புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாகி விடும் என பதிலளித்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்