28.03.2019 தேதியிட்ட ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கை, BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதை நிதியமைச்சகம் ஏற்றுக் கொள்ள வில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.
அலைக்கற்றைக்கு மொத்தம் 13,885 கோடி ரூபாய்கள் ஆகும் என அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. BSNL நிர்வாகம் அரசிற்கு கொடுத்துள்ள முன்மொழிவின் படி அலைக்கற்றை கட்டணத்தில் 50%த்தை BSNL நிறுவனம் 10 தவணைகளில் கொடுக்கும் என்றும், மீதமுள்ள 50%த்தை அரசாங்கம் தனது மூலதன அதிகரிப்பாக செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது அரசாங்கம் BSNLல் செய்துள்ள முதலீட்டில் 6942.5 கோடி ரூபாய்களை அதிகரித்துக் கொள்ளலாம்.
எனவே, யதார்த்தத்தில் அரசாங்கம் இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை. நிலைமை இப்படி இருக்கையில், BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கு நிதியமைச்சகம் ஏன் ஆதரவளிக்கவில்லை? முன்னர் நிதி ஆயோக்கும் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அனைவரின் நினைவிற்கு கொண்டு வர விரும்புகிறோம். BSNL அரசிற்கு சொந்தமான நிறுவனம் என்பதை நிதி ஆயோக்கிற்கும், நிதியமைச்சகத்திற்கும் மறந்து போனதா? . நிலைமை தற்போது தெளிவாக புரிகிறது.
BSNL புத்தாக்கம் அடைவதையும், அதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு உறுதியான போட்டியாளராகவோ வந்து விடக்கூடாது என்பதையுமே, அரசாங்கம் விரும்புகிறது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய சங்க செய்தி