Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, March 7, 2019

மத்திய AUAB கூட்ட முடிவுகள்



07.03.2019, இன்று, டில்லியில் AUAB கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது. BSNLEU, NFTEBSNL, SNEA, AIBSNLEA, AIGETOA, TEPU, BSNLMS, BSNLOA சங்க பொது செயலர்கள்/ தலைவர்கள் கலந்து கொண்டனர். 

2019 பிப்ரவரி மாத சம்பளம் பட்டுவாடா செய்யப்படாத விவகாரம், மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றதற்காக அதிகாரிகள் சங்க தலைவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள பழி வாங்கும் நடவடிக்கைகள், மூன்று நாள் வேலை நிறுத்த கோரிக்கைகளின் தற்போதைய நிலை ஆகியவை கூட்டத்தின் ஆய்படு பொருளாக வைத்து விவாதிக்கப்பட்டது. 


நீண்ட விவாதத்திற்கு பின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

1. கூட்டம் முடிந்தவுடன் BSNL CMD அவர்களை நேரில் சந்தித்து சம்பள பிரச்சனை, பழி வாங்கும் நடவடிக்கை ஆகியவை குறித்து விவாதிப்பது. 

2. 12.03.2019 முதல் மத்திய சங்க தலைவர்கள் கார்ப்பரேட் அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது.  


03. பிரச்சனை தீராத சூழலில், போராட்டத்தை மாநில, மாவட்ட மட்டங்களில் நடத்துவது.


04. 2019 ஏப்ரலில் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி செல்வது. 


தோழமையுடன்,

E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: மத்திய சங்க இணையம்