Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 9, 2019

ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பணம் - செலுத்தலில் கால தாமதம்

 Related image


ஊழியர்களின் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட பணம் பல்வேறு அமைப்புகளுக்கு அனுப்பாததனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கடுமையாகி உள்ளது- BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியம் தருவது தொடர்பாக ஒரு கடுமையான சூழல் தலமட்டங்களில் உருவாகி உள்ளது. GPF, வங்கி தவணைகள், சொசைட்டி தவணை, வீட்டு கடன் தவனை, காப்பீட்டுக் கட்டணம், வருமான வரி, PLI உள்ளிட்டவைகளுக்காக ஊழியர்களின் ஊ
தியத்தில் பிடிக்கப்பட்ட தொகைகள், பல மாதங்களாக அவற்றிற்கான நிறுவனங்களில் செலுத்தப் படுவதில்லை. 

ஊழியர்களின் ஒட்டு மொத்த ஊதியத்திற்கு பதிலாக, ஊழியர்கள், கையில் வாங்கும் ஊதியத்திற்கு தேவையான நிதியை மட்டும் கார்ப்பரேட் அலுவலகம் மாநிலங்களுக்கு அனுப்புகிறது. 

இது தொடர்பாக BSNL CMD மற்றும் DIRECTOR(Fin) ஆகியோரிடம், நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் BSNL ஊழியர் சங்கம் விவாதித்துள்ளது. மீண்டும் BSNL CMDக்கு 08.02.2019 அன்றும் ஒரு கடிதத்தை BSNL ஊழியர் சங்கம் எழுதியுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்