Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, February 5, 2019

சோப்பு, டவல் - ரொக்கம் - பட்டுவாடா

Image result for soap towel


சோப்பு, டவல், டம்ளர்,பேணா, டைரி, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களுக்கு பதில், "ரொக்கமாக" நம் முயற்சியால், ஆண்டிற்கு ரூ. 750.00 வழங்கப்பட்டு வந்தது. இந்த வருடம், ஜனவரி சம்பளத்தில், அந்த பட்டுவாடா நடைபெறவில்லை. நமது மாநில சங்கத்திற்கு பிரச்சனையை கொடுத்தோம். மாநில சங்கம் மாநில நிர்வாகத்தை உடனடியாக அணுகியது. நிதி நிலைமையை காரணம் காட்டி, இந்த வருடம் மட்டும் அந்த தொகையை  "தியாகம் செய்ய சொல்லி" மாநில நிர்வாகம் கோரிக்கை வைத்தது. 

இதை கடுமையாக எதிர்த்த நமது மாநில சங்கம், உடனடியாக பட்டுவாடா நடைபெற வேண்டும் என கோரியதன் அடிப்படையில், 02.02.2019 அன்று உத்தரவு வெளி வந்தது. இருப்பினும், அதிகாரிகளுக்கு மறுத்தது போல், நமக்கும், டைரி தொகை மறுக்கப்பட்டுள்ளது. நிதி நிலை முன்னேற்றம் கன்டவுடன், டைரி தொகை பட்டுவாடா செய்யப்படும். 

புதிய உத்தரவின்படி, 2019 பிப்ரவரி சம்பளத்துடன், ரூ. 600.00 வழங்கப்படும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
நிதி நிலை முன்னேற்றம் கண்டவுடன் வழங்கவுள்ள டைரி உத்தரவு காண இங்கே சொடுக்கவும்