Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 3, 2019

வேலை நிறுத்த தயாரிப்பு வாயிற் கூட்டம் ..


BSNLEU, NFTEBSNL, TEPU, BSNLMS மத்திய சங்கங்கள் கூட்டாக நேற்று, (02.01.2019) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2019 ஜனவரி 8, 9 இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை, நமது BSNL அரங்கில் வெற்றி பெற செய்ய, நாடு முழுவதும், 05.01.2019, சனிக்கிழமை அன்று, மதிய உணவு இடைவேளையில், ஆர்ப்பாட்ட கோஷங்களை முழங்கி, வாயிற் கூட்டம் நடத்தி, கோரிக்கைகளை ஊழியரிடத்தில் விளக்குமாறு அறைகூவல் கொடுத்துள்ளது. 

அதன்படி, நமது BSNLEU - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, 05.01.2019, மாலை 4.30 மணியளவில் சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, மாவட்டம் தழுவிய கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடைபெறும். இரண்டு சங்க தோழர்களும் இந்த போராட்டத்தில் திரளாக பங்குபெறுமாறு தோழமையுடன், கேட்டு கொள்கிறோம்.

தோழமையுடன்,
E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU 
M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU