Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 31, 2019

டிஜிடெல் கமிஷன் கூட்டம்


BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கம்/ மறு கட்டமைப்பு ஆகியவற்றை பரிசீலிக்க 2019, பிப்ரவரி 5ஆம் தேதி டிஜிடெல் கமிஷன் (பழைய டெலிகாம் கமிஷன்)னின் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்றைய தினம், (30.01.2019) AUAB மற்றும் தொலை தொடர்பு துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, 2019 பிப்ரவரி 5ஆம் தேதி டிஜிடல் கமிஷனின் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம்/ மறு கட்டமைப்பு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்படும். BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 

அதில் ஒப்புதல் வழங்கப்பட்டால், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு செல்லும். நிதி ஆயோக்கின் பிரதிநிதியாக அதன் நிதிச் செயலாளர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்