Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 24, 2019

15 வது நாள் கெம்ப்ளாஸ்ட் ஊழியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்....



BSNL ஊழியர் சங்கம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது 


ஜனவரி 8,9 பொதுவேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காகவும், சங்கம் சேர்ந்ததற்காகவும் பணிநீக்கம் செய்யப்பட்ட மேட்டூர் கெம்பளாஸ்ட் ஊழியர்கள்,  99 தொழிலாளர்கள் 15 ஆம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் உள்ளனர்.

சட்ட விரோத பணிநீக்கத்திற்கு எதிராக தொடரும் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் தொழிலாளர்களின் உறுதிமிக்க  காத்திருப்பு போராட்டம் வெல்லட்டும் என இன்று, 24.1.19, நேரில் போராட்ட களத்திற்கு சென்று சேலம் மாவட்ட BSNLEU வாழ்த் தியது.

போராட்ட நிதியாக ரூ.4000 வழங்கினோம்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்