Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, December 13, 2018

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காதது தொடர்பாக…..

Image result for funds


கார்ப்பரேட் அலுவலகம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக பல பட்டுவாடாக்களுக்கு தேவையான நிதிகளை மாநிலங்களுக்கு அனுப்ப இயலவில்லை. பல மாநிலங்களில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு பல மாநிலங்களில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனையை AUAB தலைவர்கள் 11.12.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் BSNL CMDஇடம் எழுப்பி, எப்பொழுது இந்த பிரச்சனை தீர்வடையும் என்று வினவினர். 

வங்கிகளிடம் கடன் வாங்குவதற்கான DOTயின் ஒப்புதலை பெறுவதற்கு BSNL நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் BSNL CMD தெரிவித்தார். விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்