பேரணியை வெற்றிகரமாக்குவோம்!
நமது உரிமையான ஊதிய மாற்றத்தை தாமதப்படுத்தும் DoTயை கண்டிப்போம்!!
AUAB தலைவர்களுக்கும், DoT செயலாளருக்கும், இடையே நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் DOTயிலிருந்து BSNLக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவது மற்றும் வாங்கும் உண்மை சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்கீடு ஆகிய நமது கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையில் அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு, வளர்ச்சி குறைவு, சம்பளத்திற்காக செலவழிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பு, சம்பள மாற்றத்தால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவீனங்கள், 4G அலைக்கற்றை பெற கட்டவேண்டிய தொகை என பாதகமாகவே அனைத்து கேள்விகளையும் DoT எழுப்பியுள்ளது. மீண்டும், மீண்டும் விளக்கம் கேட்பது என்பது நமது கோரிக்கைகளை மறைமுகமாக நிராகரிப்பதற்கு சமம்.
எனவே காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. 14.11.2018, நாளை நடைபெறும் பேரணியில் அதிகப்படியான ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
நாளை, 14.11.2018 மாலை 4 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைவரும் திரளவேண்டும். அங்கிருந்து பேரணி புறப்பட்டு, வள்ளுவர் சிலை வழியாக சேலம் MAIN தொலைபேசி நிலையம் வந்தடையும். கிளை செயலர்கள் பேரணிக்கு வரும்போது கிளை சங்கத்தின் பதாகை எடுத்து வந்தால் சிறப்பாக இருக்கும்.
தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB சேலம் மாவட்டம்