Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, August 5, 2018

AUAB கூட்ட முடிவுகள்

02.08.2018 அன்று, டில்லி BSNLMS சங்க அலுவலகத்தில் AUAB கூட்டமைப்பின், கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, SNEA பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின் தலைமை 
துவங்கினார். கூட்டத்தில், AUAB அமைப்பு சங்கங்கள் சார்பாக கலந்து கொண்டவர்கள் விவரம்:

BSNLEU: பொதுச் செயலர் தோழர். P.அபிமன்யூ, அகில இந்தியத் தலைவர் தோழர். பல்பீர்சிங், துணைப் பொதுச் செயலர் தோழர். ஸ்வபன் சக்ரவர்த்தி மற்றும் உதவி பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா.

NFTEBSNL:  பொதுச் செயலர் தோழர். C.சந்தேஷ்வர் சிங், துணைப் பொதுச் செயலர் தோழர். K.S.சேஷாத்ரி, அகில இந்தியப் பொருளர் தோழர். A.ராஜ்மௌலி மற்றும் தமிழ் மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்.

SNEA: பொதுச் செயலர் தோழர். K. செபாஸ்டின் மற்றும் அகில இந்தியத் தலைவர் தோழர். A. A. கான்

AIBSNLEA: பொதுச் செயலர் தோழர். பிரகலாத் ராய் மற்றும் அகில இந்தியத் தலைவர் தோழர். S. சிவகுமார்

AIGETOA: பொதுச் செயலர் தோழர். ரவிஷில் வர்மா, துணைப் பொதுச் செயலர் தோழர். வாசி அகமது மற்றும் ஆலோசகர் பஷிஸ்த் குப்தா.

BSNLMS: பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார் மற்றும் அகில இந்திய தலைவர் தோழர். மல்லிகார்ஜுனா.

BSNLATM:  உதவி பொதுச் செயலர்  தோழர். ரேவதி பிரசாத்.

TEPU: துணைப் பொதுச் செயலர் தோழர். J.விஜயகுமார்.

BSNLOA: துணைப் பொதுச் செயலர் தோழர். H.P.சிங்.

விவாதங்களுக்குப்பின் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்:

1. போராட்டங்களில் இருந்து விலகிக் கொள்வதாகவும், அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே கையெழுத்தை Scan செய்து, போராட்ட அறிவிப்பில் போடப்பட்டு விட்டதாகவும், DOT செயலருக்கும், BSNL CMDக்கும், FNTO மற்றும் SEWABSNL பொதுச் செயலர்கள் எழுதிய கடிதத்தை இந்தக் கூட்டம் ஒட்டு மொத்தமாக நிராகரித்தது. மேலும், FNTO மற்றும் SEWABSNL பொதுச் செயலர்கள், AUAB கூட்டங்களில் பங்கு பெற்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என இந்தக் கூட்டம் கருத்து தெரிவித்து உள்ளது.

2. 11-07-2018 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம், ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் 01-08-2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பு, ஆகியவற்றின் மீது AUAB தனது முழு திருப்தியை தெரிவித்தது. தொலைத்தொடர்பு (DoT) செயலரை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் கடந்த 5 மாதங்களில் ஒருமுறை கூட AUAB  தலைவர்களை தொலைத் தொடர்பு (DoT) செயலர் சந்திக்காதது, தொடர்பாக தங்களின் அதிருப்தியை தெரியப்படுத்தும் வகையில் DoT செயலருக்கு ஒரு கடிதம் எழுதுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், DoT செயலரை உடனடியாக சந்திக்க முயற்சிப்பது என்றும், அப்படி சந்திக்க முடியவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைக்கு அறைகூவல் விடுவது என்றும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.

3. BSNL நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், சிக்கன நடவடிக்கைகளை, அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, BSNL CMDக்கு, AUAB சார்பாக அனுப்பக்கூடிய கடிதம் இறுதி செய்யப்பட்டது.

4. நேரடி நியமன ஊழியர்களுக்கு 30%  ஓய்வூதிய பலன்களை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அமுலாக்க வேண்டும் என வலியுறுத்தி BSNL CMDக்கு, AUAB சார்பாக அனுப்பக்கூடிய கடிதம் இறுதி செய்யப்பட்டது. இதில், சாதகமான முடிவு வரவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டங்களின் கோரிக்கை பட்டியலில் இக் கோரிக்கையையும் இணைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 (மேலே சொல்லப்பட்ட இரண்டு கடிதங்களும் அனைத்து சங்க தலைவர்களின் கையெழுத்து பெறப்பட்டு, CMDக்கு அனுப்பப்பட்டுவிட்டது).

5. காலாவதியான மற்றும் தேவையற்ற கருவிகளை வாங்குவது, ஓய்வு பெற்ற அதிகாரிகளை பொருத்தம் இல்லாமல் ஆலோசகராக அமர்த்துவது மற்றும் AMC என்ற பெயரில் செய்யப்படும் அதீத செலவினங்கள் தொடர்பாக, BSNL CMDக்கு, AUAB சார்பாக கடிதம் எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க இதர இயக்குனர்களும் இருக்கும் வகையிலான ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும் என BSNL CMDஐ கேட்டுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

6. நிர்வாகமும், AUAB கூட்டமைப்பும் இணைந்து "BSNL உங்கள் வாசலில்" என்கிற AUAB-ன் இயக்கத்தை, கார்ப்பரேட் அலுவலகம், மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் ஒரு நிகழ்ச்சியில் துவக்குவது என்ற ஆலோசனையை BSNL CMD அவர்களிடம் வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

7. AUAB மற்றும் DOT செயலருக்கும் இடையேயான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என BSNL CMDக்கு ஒரு கடிதம் எழுதுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

8. AUAB-ன் அடுத்த கூட்டம் BSNLMS சங்க அலுவலகத்தில் 23-08-2018 அன்று நடைபெறும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்