சேலம் மாவட்ட சேம நல நிதியிலிருந்து, ஊழியர்களுக்கு கணினி கடன் வழங்க வேண்டும் என நாம் கோரி வந்தோம். தற்போது, நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, 136 அதிகாரிகள்/ஊழியர்களுக்கு கணினி கடன் வழங்க உத்தரவு வெளியாகியுள்ளது. 34 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 136 ஊழியர்களுக்கு, தலா ரூ. 25,000 வீதம் பிரித்து வழங்கப்படும். மாதம் ரூ.1000 வீதம், 25 மாதங்கள் பிடித்தம் செய்யப்படும். 26வது மாதத்தில் ரூ.1354.00 ஒரே தவணையில், வட்டியாக பிடித்தம் செய்யப்படும்.
பட்டியல் வெளியிட்டபின், மாவட்ட நிர்வாகத்திடம் (காத்திருப்பு பட்டியலில் உள்ள) எஞ்சிய ஊழியர்களுக்கும் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டாவது பட்டியல், நிதி ஆதாரங்கள் அடிப்படையில், விரைந்து வெளியிடப்படும் என நிர்வாகம் நமக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்